சமூக ஒற்றுமை வலியுறுத்தி மதுரை வீரன் வீதி உலா 2023 துவக்க வேள்வி நிகழ்ச்சி

Madurai Minutes
0

தமிழ் மண்ணின் பெருமைக்குரிய மதுரை வீரன் சரித்திரம் மற்றும் சிறப்புகளை உலகறிய செய்யும் நிகழ்ச்சியாக மதுரை வீரன் வீதி உலா 2023 துவக்க வேள்வி நிகழ்ச்சி தாராபுரம் காமராஜபுரம் வடக்கு தெரு பகுதியில் இன்று தொடங்கியது.


சமூக மற்றும் ஆன்மீக ஆர்வலர் ஆற்றல் அசோக்குமார் ஏற்பாட்டில் மத்திய அமைச்சர் எல் முருகன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகிய பங்கேற்று தொடங்கி வைத்தனர்


மதுரை வீரன் வீதி உலா குறித்து ஆற்றல் அசோக்குமார் பேசியதாவது..  சமூக ஒற்றுமை, நமது கலாச்சாரம், சமூக பாதுகாப்பு. சமூக ஒழுக்கம், பாகுபாடு அற்ற சமூகம் என ஐந்து முக்கிய குறிக்கோள்களை நோக்கமாக கொண்டு மதுரை வீரன் வீதி உலா திருப்பூர் ஈரோடு நாமக்கல் மாவட்டங்களில் பொதுமக்கள் ஆன்மீகப் பெரியோர்கள் பங்களிப்போடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது


ஆன்மீக பயணத்தில் மதுரை வீரன் சிறப்புகளை விளக்கம் குறும்படம் நாட்டுப்புற கதைகள் மற்றும் வீர பாடல்கள் ஒளிபரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


ஆன்மீக வீதி உலா துவக்க வேள்வியாக 108 யாகங்கள் நடைபெறுகிறது யாக பூஜையில் பங்கேற்கும் பொது மக்களுக்கு காப்பு மற்றும் விளக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது.  இதில் பங்கேற்கும் விருந்தினர்கள் நமது பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறையில் மதுரை வீரன் பங்கு பற்றி பேசுகிறார்கள்.

ஆறடி உயரத்தில் தங்கத்தேரில் வீர வாழுடன் மதுரை வீரன் தேரில் வலம் வருகிறார். தாராபுரத்தில் துவங்கும் இந்த ஆன்மீகப் பயணம் தொடர்ந்து காங்கேயம் மொடக்குறிச்சி ஈரோடு கிழக்கு, மேற்கு மற்றும்  குமார பாளையம் பகுதிகளில் ஒவ்வொரு வீதியாக சுமார் 500 கிராமங்கள் பயணிக்கும் மதுரை வீரன் தங்கத்தேர் 150 நாட்கள் தொடர் பயணமாக செல்கிறார். 2500 கிலோமீட்டர் பயணித்து ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பொதுமக்களும் மதுரை வீரனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகங்கள் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


நம்மை காக்க வருகிறார் நம் காவல் தெய்வம் மதுரை வீரனுக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளிக்க தயாராகி வருகின்றனர். பொதுமக்கள் திரளாக பங்கேற்று மதுரை வீரன் ஆசி பெற ஆற்றல் அசோக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 133 கோயில்கள் மேம்பாடு


சமூக ஆர்வலரும் ஆன்மீகவாதியமான ஆற்றல் அசோக்குமார் இதுவரை அரசு பள்ளிகளை பராமரிப்பு பணிகளை செய்து மேம்படுத்துவது .133 கோயில்களை புனரமைத்துக் கொடுத்து சுமார் 10,000 பொதுமக்கள் இதன் மூலம் பயன்பட்டு வருகின்றனர்


22 சமுதாயக்கூடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டு 41,000 பொதுமக்கள் பயன்பட்டு வருகின்றனர். தொடர்ந்து மக்கள் நலனுக்காக சமூகம் சார்ந்த பணிகளையும் ஆன்மீகப் பணிகளையும். பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !