வலையங்குளம் கிராமத்தில் போலி மருத்துவர் கைது

Madurai Minutes
0

மதுரை மாவட்டம், வலையங்குளம்  கிராமத்தில்  மாவட்ட ஆட்சியர் அவர்கள் கள ஆய்வின் போது பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற புகார் மனுவின் பேரில், வலையங்குளம் கிராமத்தில் கீதா கிளினிக் என்ற பெயரில் அழகர்சாமி,  சித்த மருத்துவர் என பெயர் பலகை வைத்து அலோபதி மருந்து மாத்திரைகளைக் கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நபரை, மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் கள ஆய்வின் போது நேரடியாக சென்று கையும் களவுமாக பிடித்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாவட்ட இணை இயக்குனர் நலப் பணிகள் அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளார்கள்.


இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட இணை இயக்குனர் நல பணிகள் அவர்கள் தலைமையிலான குழு வலையங்குளம் கிராமத்தில் கீதா கிளினிக் என்ற பெயரில் செயல்பட்டு வந்த மருத்துவமனையை ஆய்வு செய்து, மருந்து மாத்திரைகள் மற்றும் பிற உபகரணங்களை பறிமுதல் செய்து மருத்துவமனையை சீல் இட்டனர். போலியாக  மருத்துவம் பார்த்து வந்த நபரை காவல் துறையினரிடம்  ஒப்படைத்துள்ளனர்.
Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !