சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் வங்கி கூட்டாண்மையை விரிவுபடுத்தும் அல்கான் நிறுவனம்

Madurai Minutes
0

கண் பராமரிப்பு சேவையில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அல்கான் நிறுவனம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் வங்கியுடனான தனது கூட்டாண்மையை மேலும் விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. 


இதன் மூலம் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்குகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத பகுதிகளில் மறுசுழற்சி சுற்றுச்சூழலை உருவாக்கி பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடும் அதே வேளையில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வழங்கும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள உறுப்பினர்களுக்கு உதவிட உள்ளது. 


சந்தையில் இந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு டன் பிளாஸ்டிக்கையும் ஈடு செய்யும் வகையில் கடலுக்குச் செல்லும் பிளாஸ்டிக்கை பிளாஸ்டிக் வங்கியுடன் இணைந்து இந்நிறுவனம் சேகரிக்கிறது. இந்த பணியில் கடலோர சமூகத்தினர் ஈடுபடும்போது அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுகிறது. கடந்த 2022–ம் ஆண்டில், குறிப்பிட்ட கண் அறுவை சிகிச்சை மற்றும் பார்வை பராமரிப்பு தயாரிப்புகளுக்காக அல்கான் பயன்படுத்திய பிளாஸ்டிக்கை ஈடுசெய்யும் வகையில் பிளாஸ்டிக் வங்கி 6,49,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சுற்றுச்சூழலில் இருந்து அகற்றி உள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் 9,90,000 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற அல்கான் திட்டமிட்டுள்ளது. இது இந்த ஆண்டு 5 கோடிக்கும் அதிகமான பிளாஸ்டிக் பாட்டில்கள் கடலுக்கு செல்வதை தடுப்பதற்கு சமம் ஆகும்.


பிளாஸ்டிக் வங்கியுடனான கூட்டாண்மை மூலம் அல்கான் நடப்பு ஆண்டில் உலகளவில் 330க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு உதவ உள்ளது. இந்த பிளாஸ்டிக் சேகரிப்பில் ஈடுபடும் உறுப்பினர்கள் தாங்கள் சேகரிக்கும் பிளாஸ்டிக்கிற்கு ஏற்ப இன்சூரன்ஸ், மளிகை பொருட்களுக்கான வவுச்சர்கள் மற்றும் பள்ளிக்கு தேவையான எழுது பொருட்கள், நோட்டு, புத்தகம் போன்றவற்றை பெறலாம்.


இது குறித்து அல்கான் நிறுவனத்தின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகப் பிரிவு தலைவர் சார்லஸ் ஹெர்கெட் கூறுகையில், மருத்துவப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்குகள் என்பது இன்றியமையாதவை என்றபோதிலும், பிளாஸ்டிக் வங்கியுடன் இணைந்து இதுபோன்ற திட்டங்களை ஆதரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலில் அவற்றின் தாக்கத்தைக் குறைக்க முயற்சி செய்து வருகிறோம். பிளாஸ்டிக் வங்கியுடன் தொடர்ந்து நாங்கள் செயல்படுவதன் மூலம் எங்களது அறுவை சிகிச்சை மற்றும் கண் பாதுகாப்பு பிரிவில் பிளாஸ்டிக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை ஈடுசெய்யும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இதேபோல் பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங் பொருட்கள் போன்ற பிற தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை குறைப்பதற்காக தொடர்ந்து நாங்கள் நடவடிக்கைகைள எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.


கடந்த ஆண்டில், அல்கான் நிறுவனத்தின் அறுவை சிகிச்சை மற்றும் கண் பாதுகாப்பு தயாரிப்புகள் இரண்டையும் உள்ளடக்கிய பிளாஸ்டிக் வங்கி திட்டத்தின் மூலம் 3.20 கோடிக்கும் அதிகமான பிளாஸ்டிக் பாட்டில்கள் அகற்றப்பட்டுள்ளன.


மேலும் குறிப்பாக, அல்கான் சர்ஜிக்கல் தயாரிப்புகளுடன் கூடிய பிளாஸ்டிக் வங்கி திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமான பிளாஸ்டிக் பாட்டில்களுக்குச் சமமான 42,672 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டில் அல்ட்ராசெர்ட் மற்றும் ஆட்டோனோமீ லென்ஸ் தயாரிப்பகளுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு சமமாக கடலுக்குச் செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை இந்நிறுவனம் சேகரிக்க உள்ளது.


பிளாஸ்டிக் வங்கி கூட்டுடன் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வரும் அல்கான் நிறுவனம், பசுமை கண்டுபிடிப்புகள் அறுவை சிகிச்சை குழு என்னும் திட்டத்தை உருவாக்கி, அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவுடன் இணைந்து 90 சதவீதம் வரை பேக்கேஜிங் மற்றும் ஷிப்பிங் பிரிவுகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


அதேபோல் இந்நிறுவனம் அதன் பார்வை பராமரிப்பு தயாரிப்புகளுக்கான டெய்லிஸ் டோட்டல் 1 மற்றும் பிரிசிஷன் 1 லென்ஸ்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை ஈடுசெய்யும் வகையில் கடந்த ஆண்டு 6,00,000 கிலோவுக்கும் அதிகமான பிளாஸ்டிக்கை அகற்றியது, இது 3 கோடி பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு சமமானதாகும்.


இதன் தொடர்ச்சியாக, நடப்பு ஆண்டில், ஆஸ்திரேலியா, எகிப்து, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கப்படும் சிஸ்டேன் கண் சொட்டுகளுக்கு பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கை ஈடுசெய்யும் வகையில் அந்த நாடுகளில் பிளாஸ்க் கழிவுகளை அகற்ற திட்டமிட்டுள்ளது. இது 75 லட்சத்திற்கும் அதிகமான பிளாஸ்டிக் பாட்டில்களுக்குச் சமமான 150,856 கிலோ பிளாஸ்டிக்கைக் குறிக்கிறது, இது இந்த ஆண்டு கடலுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அல்கான் மேற்கொண்டுள்ளது. மொத்தத்தில் 90 நாடுகளில் இந்த திட்டத்தை அல்கான் செயல்படுத்துகிறது.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !