தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

Madurai Minutes
0

மதுரை தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலை அருகே இன்று (18.07.2023) தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இந்திய தேசம் சுதந்திரம் பெற்ற பின்பு மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் 1967-ஆம் ஆண்டு ஜீலை 18-ஆம் நாள் அன்றைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்கள் மெட்ராஸ் மாகாணத்திற்கு ”தமிழ்நாடு” என்று பெயர் சூட்டி சட்டமன்ற பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இந்நாளை ”தமிழ்நாடு நாள்” விழாவாக கொண்டாட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

அந்த வகையில், மதுரை தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலை அருகே பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற தமிழ்நாடு நாள் விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி காந்தி நினைவு அருங்காட்சியகம் வழியாக மதுரை உலக தமிழ்ச்சங்கம் வளாகத்தில் நிறைவு பெற்றது. 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்று ”அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு”  ”இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” ”தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தான் உயரும்” ”யாதும் ஊரே யாவரும் கேளீர்” என தமிழ் மொழி மற்றும் தமிழ்நாட்டின் பெருமைகளை பறைசாற்றும் வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு மரியாதை செலுத்தினார். மேலும், தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவச் செலவங்களுக்கு முதல் பரிசாக தலா ரூபாய் 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூபாய் 7 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூபாய் 5 ஆயிரம் என பரிசுத் தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள், காவல் துணை ஆணையர் திரு.பி.கே.அர்விந்த், இ.கா.ப., அவர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.கார்த்திகா அவர்கள், துணை மேயர் திரு.தி.நாகராஜன் அவர்கள் உட்பட அரசு அலுவலர்கள்  பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !