தமிழ்நாடு தினத்தை கொண்டாடும் பிரிட்டானியா மில்க் பிகிஸ்

Madurai Minutes
0

தமிழ்நாட்டின் பெருமை மற்றும் தமிழ் மொழியின் பன்முகத்தன்மை ஆகியவற்றை போற்றும் வகையில், ‘அனைவருக்கும்’ என்ற பெயரில், தமிழ்நாட்டிற்கான புதியதொரு விளம்பரத் திட்டத்தை பிரிட்டானியா மில்க் பிகிஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. 'அனைவருக்கும்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விளம்பர திட்டமானது, தமிழ் மொழியின் பன்முகத்தன்மையை கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் அதற்கென்ற தனித்துவமான பாரம்பரியம், கண்கவரும் கலைவடிவங்கள், வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் அழகிய வட்டார மொழி உள்ளது. இவற்றைக் கொண்டாடும் விதமாகவும், 1978ம் ஆண்டு முதல் தமிழ் மக்கள் பிரிட்டானியா மீது காட்டி வரும் அன்பிற்கு நன்றி கூறும் விதமாகவும், இந்த 'அனைவருக்கும்' விளம்பரத் திட்டத்தை செயல்படுத்துகிறது.  


இத்திட்டத்தை தமிழ்நாட்டின் பெருநகரங்கள் மட்டுமின்றி சிறு நகரங்கள், கிராமங்கள் என அனைத்து ஊர்களின் பெருமைகளையும் கொண்டாடும் விதமாக அமைத்துள்ளது. தமிழ் மக்களுடனான பிரிட்டானியாவின் 40 ஆண்டுகால பயணத்தில் பெற்ற புரிதல் மற்றும் அன்பின் வெளிப்பாடே இந்த விளம்பரத் திட்டம்.இத்திட்டத்தின் கீழ், சென்னை, கோவை, மதுரை, காரைக்குடி, தூத்துக்குடி, ஈரோடு மற்றும் மேலும் பல ஊர்களில் உள்ள 15க்கும் மேற்பட்ட பாஷைகளில் 5 வீடியோக்களை வெளியிட்டுள்ளது. மெட்டா ப்ளாட்பார்ம்களில் உள்ள பின்கோடு தொழில்நுட்பத்தைக் கொண்டு ஒவ்வொரு வீடியோவும், அந்த வட்டார மொழி பேசும் ஊர்களில் உள்ள மக்களை சரியாக சென்றடைய வழிவகுத்துள்ளது. இது மட்டுமின்றி, ஒவ்வொரு ஊருக்கும் ஏற்றவாறு, விளம்பர பலகைகளையும், செய்தித்தாள் விளம்பரங்களையும், இத்திட்டத்தின் கீழ் பிரிட்டானியா வெளியிட்டுள்ளது.

 

இந்த விளம்பரத் திட்டம் குறித்து, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் மார்க்கெட்டிங் துறையின் தலைமை அதிகாரி அமித் தோஷி கூறுகையில் "தமிழ் மக்கள் அனைவரும் மில்க் பிகிஸை நேசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் வாங்கப்படும் 5 பிஸ்கட்டில் 1 பிஸ்கட், மில்க் பிகிஸாகும். மேலும், தமிழ்நாட்டில் உள்ள மூன்றில் ஒரு பங்கு வீடுகளில் ஒவ்வொரு மாதமும் மில்க் பிகிஸ் தவறாமல் வாங்கப்படுகிறது. எங்கள் மீது இத்தனை அன்பு கொண்ட தமிழ் மக்களின், பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம், மொழி, பாரம்பரியம் போன்றவற்றிற்கு நாங்கள் அளிக்கும் சமர்ப்பணமே இந்த 'அனைவருக்கும்' விளம்பரத் திட்டம்" என்றார்.

 

இந்த விளம்பரத் திட்டம் குறித்து, டேலண்டட் கிரியேட்டிவ் ஏஜென்சியின் நிறுவனர் பிஜி ஆதித்யா கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளின் கலாச்சார அழகியலை பெருமைபடுத்தும் 60 பகுதிகளை கொண்ட இந்த திட்டத்தை தமிழ் மக்களுக்கு நாங்கள் சமர்ப்பணம் செய்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் பேசப்படும் பாஷைகளுக்கு ஏற்றவாறு எங்களின் விளம்பரங்களை நாங்கள் வடிவமைத்துள்ளோம். மக்களோடு மக்களாக மக்களின் மொழியை பேசுவதற்கான வாய்ப்பு மில்க் பிகிஸிற்கு எப்போதுமே இருந்துள்ளது. அதனை சரியான தருணத்தில் சரியாக செயல்படுத்தி உள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !