23 தொழிற்பிரிவுகளில் 550 காலியிடங்களுக்கான நேரடி சேர்க்கை மதுரையில் நடைபெறுகிறது

Madurai Minutes
0

23 தொழிற்பிரிவுகளில் 550 காலியிடங்களுக்கான நேரடி சேர்க்கை 13.07.2023 முதல் 20.07.2023 வரை அரசு தொழிற்பயிற்சி நிலையம், கோ.புதூர் மதுரையில் நடைபெறுகிறது. பயிற்சி கட்டணம் கிடையாது.


14 வயது நிறைவு பெற்ற 8-ஆம் வகுப்பு / 10-ஆம் வகுப்பு தேர்ச்சி மாணவ / மாணவியர் மாற்றுச் சான்றிதழ் பத்தாம் வகுப்பு / எட்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டை நகல், மார்பளவு புகைப்படம் (ஐந்து எண்கள்) ஆகியவற்றுடன் அலுவலகத்திற்கு நேரில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணிக்குள் வந்து வருகையினை பதிவு செய்து விதிகளின்படி காலியாக உள்ள தொழிற்பிரிவுகளில் அன்றைய தினமே ஓராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.185/-மும் மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவிற்கு ரூ.195/-மும் செலுத்தி பயிற்சியில் சேரலாம். விண்ணப்பத்தினை பதிவு செய்வதற்கான கட்டணம் ரூ.50/- ஆகும்.


சலுகைகள்: மாதந்தோறும் அனைத்து பயிற்சியாளர்களுக்கும் ரூ.750/- உதவித் தொகையுடன் கூடுதலாக புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/-மும் வழங்கப்படும், விலையில்லா மிதிவண்டி, விலையில்லா இரண்டு செட் சீருடை & தையற்கூலி, விலையில்லா ஒரு செட் காலணி, கட்டணமில்லா பேருந்து சலுகை, உணவுடன் கூடிய இலவச தங்கும் விடுதி வசதி உண்டு, விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள் வழங்கப்படுகிறது.


மேலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்.34, நாள்.30.03.2022 -ன்படி, பத்தாம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 12-ஆம் வகுப்பு சான்றிதழ் பெறலாம். இதுபோல 8-ஆம் வகுப்பு முடித்து இரண்டாண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் எழுதி 10-ஆம் வகுப்பு சான்றிதழ் பெறலாம்.


சேர்க்கை குறித்த மேலும் விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது அரசு தொழிற்பயிற்சி நிலையம் மதுரையினை நேரில் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். இந்த அரிய வாய்ப்பை மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !