தமிழ்நாடு நாளை யொட்டி மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்

Madurai Minutes
0

தமிழ்நாடு நாளை யொட்டி மதுரை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தாய்த்தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18 (18.07.1967) ஆம் நாளினைப் பெருமைப்படுத்தும் வகையில் அந்த நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.


இவ்வறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடுநாளையொட்டி மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 12.07.2023ஆம்நாள் முற்பகலில் மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகக் கூட்ட அரங்கில் நடத்தப்பட்டன.


இப்போட்டிகளுக்கு, மேலூர், அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த  வி.சண்முகவேல், மு.க.ஆ(தமிழ்) எம்.சுப்புலாபுரம். அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ஆர். கிருஷ்ணவேணி. மு.க.ஆ (தமிழ்) முடுவார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த  மா. இசக்கிமுத்து மு.க.ஆ (தமிழ்), திருமங்கலம் பி.கே.என். அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த எஸ்.விஜயலட்சுமி.மு.க.ஆ (தமிழ்) கோட்டநத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த  என்.தனலட்சுமி, மு.க.ஆ. (தமிழ்) புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மா.ஜெயராஜ் மு.க.ஆ. (தமிழ்) ஆகியோர் நடுவர்களாகப் பணிபுரிந்தனர்.


கட்டுரைப்போட்டியில் நாகமலை சிறுமலர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி குலோத்தனா முதல் பரிசாக ரூ.10000 கள்ளிக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி துர்காதேவி இரண்டாம் பரிசாக ரூ.7000/ திருநகர் முத்துத்தேவர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஸ்ரீசஜித் மூன்றாம் பரிசாக ரூ.5000 வென்றனர்.


பேச்சுப்போட்டியில் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெய்ஸ்ரீ முதல் பரிசாக ரூ.10000 குராயூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீ இரண்டாம் பரிசாக ரூ.7000 திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சரவண பவதாரணி மூன்றாம் பரிசாக ரூ.5000 வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் சுசிலா மேற்கொண்டார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !