சென்னையில் நடைபெறும் ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன் ஷிப் போட்டி கோப்பையை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி

Madurai Minutes
0

மதுரை மாவட்டம்,  அமெரிக்கன் கல்லூரியில் சென்னையில் நடைபெறும் ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன் ஷிப் போட்டி கோப்பையை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியை நேற்று (24.07.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-


7-வது ஹீரோ ஆசிய ஆண்கள் கோப்பை ஹாக்கி கோப்பை போட்டிகள் சென்னையில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியா, ஜப்பான், கொரியா, பாகிஸ்தான், சீனா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் பங்குகொள்கின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய ஹாக்கி கழகம், தமிழ்நாடு ஹாக்கி கழகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளார்கள்.


ஆசிய கோப்பை விளையாட்டுப் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் மாண்புமிகு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.அக்னுராக்தாகூர் அவர்கள் 13.07.2023-அன்று டெல்லியில் Pass the Ball Trophy Tour என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். இதனையடுத்து, அந்த விழிப்புணர்பு கோப்பை இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் வலம் வருகிறது. இந்த ஹாக்கி விளையாட்டானது 100 ஆண்டுகளுக்கு மேலாக உலக அரங்கில் விளையாடப்பட்டு வருகிறது. இதுவரை ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும், ஒரு உலக கோப்பையும் வென்ற பெருமையுடையது. தற்போது உலக தரவரிசையில் நமது இந்திய அணி நான்காவது இடத்தில் உள்ளது. இதுவரை இந்திய ஹாக்கி வரலாற்றில் தமிழ்நாடு சார்பாக இந்திய அளவில் இடம் பெற்று சாதனை புரிந்த ஹாக்கி விளையாட்டு வீரர்களின் புகைப்படம் மற்றும் சாதனை விபரம் அடங்கிய கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மாநிலத்தில் ஹாக்கி விளையாட்டுப் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இளைஞர்கள் அதிகளவில் ஹாக்கி போட்டியில் பங்களித்திட ஊக்குவிக்கும் நோக்கில் 7-வது ஹீரோ தமிழ்நாடு ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன் ஷிப் கோப்பை  "பாஸ்-தி-பால் ட்ராபி டூர்" போட்டி சென்னையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, டெல்லியில் தொடங்கி வைக்கப்பட்ட Pass the Ball Trophy Tour விழிப்புணர்வு கோப்பை தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்திடும் வகையில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 20.07.2023-அன்று  விழிப்புணர்வு சுற்றுப் பயண நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 


இதனையடுத்து பல்வேறு நகரங்கில் Pass the Ball Trophy Tour விழிப்புணர்வு கோப்பை காட்சிப்படுத்தப்பட்டு சிவகங்கை மாவட்டத்திலிருந்து இன்றைய தினம் மதுரை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, இளைஞர்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பார்வைக்கு இக்கோப்பை காட்சிப்படுத்தப்படுகிறது. தொடர்ந்து இக்கோப்பை தேனி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 'பசுமை விளையாட்டுக்களை ஊக்குவித்தல்" (Promoting Green Sports) என்ற நிகழ்ச்சி மூலம் மாணவ, மாணவியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியின் போது, மாநகராட்சி ஆணையாளர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.திவ்யான்ஷு நிகம், இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கோ.தளபதி (மதுரை வடக்கு) அவர்கள், திரு.மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) அவர்கள்,  அமெரிக்கன் கல்லூரி முதல்வர் / செயலர் திரு.எம்.தவமணி கிறிஸ்டோபர் அவர்கள்,  அமெரிக்கன் கல்லூரி துணை முதல்வர் திரு.எ.மார்டின் டேவிட் அவர்கள், மதுரை மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் திரு.ஏ.ஜி.கண்ணன் அவர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் முனைவர் திரு.கே.ராஜா அவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !