சிறுதானிய உணவகம் அமைத்திட மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு அழைப்பு

Madurai Minutes
0

2023-ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுவதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் (Milllet Cafe) அமைத்திட உள்ளதால், சிறுதானிய உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்கள் / உற்பத்தியாளர் குழுக்கள் / கூட்டமைப்புகள் விண்ணப்பிக்கலாம். 


மகளிர் குழு துவங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்றிருக்க வேண்டும். தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (NRLM MIS - Portal)  இணைய தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு A அல்லது B சான்று பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியை சேர்ந்த குழுவாக இருத்தல் அவசியம்.


இதற்கான விண்ணப்பம் ரிசர்வ் லயன் பஸ் நிறுத்தம் அருகில், புதுநத்தம் சாலை, மதுரை - 625 014 என்ற முகவரியில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் அலுவலகத்தில் கிடைக்கும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ/தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். 16.07.2023-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டும். எனவே, சிறுதானிய உணவகம் (Milllet Cafe) அமைத்திட விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !