ஐ.ஆர்.சி.டி.சி-ன் பாரத் கௌரவ் சிறப்பு ரயில் சுற்றுலா

Madurai Minutes
0

இந்தியன் ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டிசி பயணிகளுக்காக பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. "ஓம்காரேஸ்வர் அமாவாசை யாத்திரை" என்ற பெயரில் சுற்றுப்பயணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த சுற்றுலா ரயிலில் 03 குளிர்சாதன பெட்டிகள், 08 ஸ்லீப்பர் கோச்சுகள், 01 பேண்ட்ரிகார், 02 பவர்கார்கள் என மொத்தம் 14 பெட்டிகள் உள்ளன. 11 பகல் 12 இரவுகளைக் கொண்ட இந்த சுற்றுலா பயணமானது, வரும் ஆகஸ்டு 7ம் தேதியன்று(07.08.2023) திருநெல்வேலியிலிருந்து துவங்குகிறது.  


இந்த பயணத்தில் பார்வையிடும் இடங்கள்:


ஹரித்வார் ரிஷிகேஷ் - திருவேணிசங்கமம் (அலகாபாத்) - வாரணாசி (காசி) - கயா மஹாகாலேஸ்வர் (ஜோதிர்லிங்கம்) ஆகிய இடங்களை பார்வையிடலாம். 


இந்தப்பயணத்திற்கு ஒருநபருக்கு :


1  இரணடாம் வகுப்பு படுக்கை வசதி: Rs.21, 800/-

2. 3ம் வகுப்பு ஏசி: Rs.39, 100/-  கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


பிரத்யேக பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலின் முக்கிய அம்சங்கள்:


1. 3AC வகுப்பு/SL வகுப்பில் ரயில் பயணம்

2. AC/NAC தங்குமிடம்

3. உள்ளூர் பார்வையிடுவதற்கான போக்குவரத்து

4. உணவு

5. சுற்றுலா மேலாளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி ஆகிய வசதிகள் உளளன.


இரயில் வழித்தடம்: திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் வழியாகச் செல்லும். 


இந்தப்பயணத்திற்கு  முன்பதிவு செய்ய சென்னை: 9003140680/682 மதுரை:8287932122 திருச்சி: 8287932070 கோயம்புத்தூர்: 9003140655 ஆகிய எண்களிலும் ஐஆர்சிடிசி-ன்  இணையதளத்திலும்  முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !