கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மாநகராட்சி பள்ளி மாணவிகள் பார்வை

Madurai Minutes
0

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மாநகராட்சி பொன்முடியார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாண்புமிகு மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த் அவர்கள், ஆணையாளர் திரு.கே.ஜே.பிரவீன்குமார், இ.ஆ.ப., அவர்களுடன் 20.07.2023 அன்று பார்வையிட்டனர். 


ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 15.07.2023 அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். இந்நூலகம் தரைதளம், முதல்தளம் என 7 தளங்களுடன் மிக பிரமாண்டமாய் கட்டப்பட்டுள்ளது. கலைஞர் நூலகத்தின் தரைத்தளத்தில் தமிழ்நாடு பாடநூல்கள், போட்டித் தேர்விற்கான நூல்கள், முதல் தளத்தில் குழந்தைகளுக்கான நூல்கள், இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள், தமிழ் இலக்கியங்கள், இலக்கண நூல்கள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், சுயசரிதை நூல்கள் மற்றும் கனிணி அறிவியல், இதழியல் உட்பட  ஒரு லட்சம் தமிழ் நூல்கள் இடம் பெற்றுள்ளன. மூன்றாம் ஆம் தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவில் கணிப்பொறியியல், தத்துவம், சமயம், சமூக அறிவியல், பொருளாதாரம், நுண்கலை, விளையாட்டு, சினிமா, மேலாண்மை, புவியியல் உள்பட 1 லட்சம் நூல்கள் இந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன. நான்காம் ஆம் தளத்தில் போட்டித் தேர்வு நூல்கள் பிரிவில் டி.என்.பி.எஸ்.சி. உள்பட அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் சுமார் 30 ஆயிரம் நூல்கள் இடம் பெற்றுள்ளன. ஐந்தாம் தளத்தில் டிஜிட்டல் நூலகம், அரிய நூல்கள் பிரவு, ஆறாம் தளத்தில் ஆங்கில குறிப்புதவி நூல்கள் அறிவியல் தொழில்நுட்பம் வரலாறு என அனைத்து பாடப்பிரிவுகளில் சுமார் 60 ஆயிரம் ஆங்கில குறிப்புதவி நூல்கள் இடம் பெற்றுள்ளன. பாரம்பரிய சிற்பங்கள், ஓவியங்களும் வைக்கப் பட்டுள்ளன. 


மாண்புமிகு மேயர் அவர்களின் உத்தரவின்பேரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 15 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு  மாணவ, மாணவிகளை 20.07.2023  முதல் 09.8.2023 வரை ஒவ்வொரு பள்ளி வாரியாக ஒரு பள்ளிக்கு 200 மாணவ, மாணவிகள் வீதம்  8 ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாளான 20.07.2023 அன்று பொன்முடியார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவிகளுடன் சேர்ந்து மாண்புமிகு மேயர், ஆணையாளர் அவர்கள் ஆகியோர் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டு மாணவிகளுடன் கலந்துரையாடினர்.  

இந்நிகழ்வில் துணை மேயர் திரு.தி.நாகராஜன், மண்டலத்தலைவர் திருமதி.சரவண புவனேஸ்வரி, கல்விக்குழுத் தலைவர் திரு.ரவிச்சந்திரன், உதவி ஆணையாளர் திருமதி. வரலெட்சுமி, கல்வி அலுவலர் திரு.நாகேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மகேஸ்வரன், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !