TiE சென்னை தமிழ்நாட்டின் 2 மற்றும் 3ஆம் அடுக்கு நகரங்களில் தொழில்முனைவோரை மேம்படுத்தும் TiE ரீச் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது

Madurai Minutes
0

மதுரை மாநகரில் TiE Reach நிகழ்வை தொழில் முனைவோர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது TiE Chennai. இந்தத் திட்டமானது, நகர்ப்புறங்களில் வாழும் தொழில் முனைவோர்களுக்கு கிடைக்கும் வழிகாட்டும் வாய்ப்புகளைப் போலவே சிறிய நகரங்களில் வாழும் தொழில் முனைவோர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது..


சிறிய நகரங்களில் இருக்கும் தொழில் முனைவோர்களுக்கு தொழில் வளர்ச்சி மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்திற்கும் வழிகாட்டுவதே  TiE Reachஇன் முக்கியமான நோக்கமாகும். ஒவ்வொரு மாதமும் இரண்டு சிறிய நகரங்களை கண்டறிந்து தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்கு உதவ தீர்மானித்துள்ளது 


இந்த TiE Reach திட்டம்  COVID lockdown-க்கு  முன்பே தொடங்கப்பட்டது. மேலும் TiE Chennai இந்தத் திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, சேலம், ஈரோடு, கும்பகோணம் மற்றும் கடலூரில் நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.


அதை அடுத்து  TiE Reach நிகழ்வு மதுரையில் ஜூலை 29,  சனிக்கிழமையன்று "Hotel Fortune Pandian"னில் அமைந்துள்ள பாண்டியன் அரங்கில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் தொழில்முனைவோர் சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த புகழ்பெற்ற பேச்சாளர்கள் இடம்பெற்றார்கள். Cavinkare Pvt Limited-இன் நிர்வாக இயக்குநர் மற்றும் TiE Chennaiயின் Presidentடுமான திரு.சி.கே.ரங்கநாதன்,"சிறு வணிகங்கள் ஏன் சிறியதாகவே தொடர்ந்து இருக்கின்றன?" என்ற தலைப்பில் தன்னுடைய அனுபவங்களின் அடிப்படையில் பேசினார். மேலும், Bharath Matrimonyஇன்  நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு.முருகவேல் ஜானகிராமன், "Scaling Up - Growth Ideas" பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், TiE சென்னை-யின் செயல் இயக்குநர்  திருமதி.அகிலா ராஜேஷ்வர் TiE சென்னை-யின் செயல்பாடுகள் பற்றி அறிமுகப் படுத்தினர்.


இதில் பேசிய திரு. C K Ranganathan தனிமனித ஒழுக்கம் மிகவும் இன்றியமையாதது என்றும் "தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது அவரவரேதான்" என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து திரு. Murugavel Janakiraman பேசுகையில் தொழில் வளர்ச்சிக்கான பாதையில் முன்னேறுவதற்கான செயப்பாடுகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்.


தமிழ்நாட்டில் தொழில்முனைவோரை மேம்படுத்தும்  உற்சாகமான பயணத்தின் ஒரு பகுதியாக, மதுரையில் TiE Reach நிகழ்வு நடைபெற்றது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !