மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிதியுதவியுடன் வாராப்பூரில் கட்டப்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி புதிய கட்டிடம்

Madurai Minutes
0

தமிழ்நாடு அரசின் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. கேஆர். பெரியகருப்பன், வாராப்பூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடத்தை இன்று திறந்து வைத்தார். நூலகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், குடிநீர் மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளை உள்ளடக்கிய இப்புதிய கட்டிட கட்டுமான செலவு முழுவதையும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் நிதியுதவி அளித்திருக்கிறது.


சிவகங்கை மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் திருமதி. ஆஷா அஜித் ஐஏஎஸ் அவர்கள், பள்ளியின் நூலகத்தை திறந்து வைத்தார். மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் டாக்டர். என். சேதுராமன் மற்றும் அதன் தலைவர் டாக்டர். எஸ் குருசங்கர் இந்த தொடக்கவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.


வாராப்பூர் மற்றும் அதைச்சுற்றி அமைந்துள்ள குரும்பலூர், சடையம்பட்டி, கட்டையன்பட்டி மற்றும் அரியாண்டிபட்டி என்ற நான்கு கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வாராப்பூரில் அமைந்துள்ள இந்த அரசு நடுநிலைப்பள்ளி கல்விச்சேவையை வழங்கி வருகிறது. எனினும், இங்கு அமைந்திருக்கும் பள்ளிக்கட்டிடம் மிகப்பழமையாக உரிய பராமரிப்பின்றி இருந்தது. எனவே வேறு வழியின்றி சமீப ஆண்டுகளில் மரங்களுக்கு கீழும் மற்றும் அருகிலுள்ள சமூக நல கூடங்களிலும் மாணவர்களுக்கான வகுப்புகளை ஆசிரியர்கள் நடத்த வேண்டியிருந்தது. பள்ளியில் உரிய வசதிகள் இல்லாத காரணத்தால் படிப்பைத் தொடர விருப்பமின்றி பல மாணவர்கள்  கல்வி கற்பதையே நிறுத்திவிட்டனர். வேறு சில குடும்பங்கள் அவர்களது குழந்தைகளின் கல்விக்காக இந்த கிராமங்களை விட்டு வெளியேறி வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்து விட்டனர்.


இம்மாணவர்கள் படும் சிரமமும், தினசரி எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்திற்கு கிராம மக்களால் கொண்டுவரப்பட்டது. மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர். என். சேதுராமன் அவர்கள் பிறந்த சொந்த ஊராக வாராப்பூர் இருப்பதால் அங்குள்ள பள்ளியில் ஏற்கனவே இருந்து வரும் கட்டிடத்தை சீரமைத்து புதுப்பிக்கவும் மற்றும் வசதியான புதிய கட்டிடத்தை கட்டித்தரவும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை நிர்வாகம் ஆர்வத்தோடு முன் வந்தது. 


தொடங்கப்பட்ட கட்டிட கட்டுமான மற்றும் சீரமைப்பு பணிகள் சிறப்பாகவும் விரைவாகவும் முடிக்கப்பட்டன. பள்ளியில் நிறுவப்பட்டுள்ள புதிய வசதிகள் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கும். ரூபாய் 1.2 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களுடன் நூலகம்; ஸ்மார்ட் போர்டு, ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளுடன் வகுப்பறைகள், கணினி ஆய்வகங்கள், குடிநீர் வசதிகள் மற்றும் ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனி கழிப்பறைகள். சிசிடிவி கேமராக்கள் விளக்குத்தூண்கள் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டதாக இப்பள்ளிக்கட்டிடம் இப்போது உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கும் கூடுதலாக தடங்கலற்ற மின்சாரத்தை பள்ளிக்கு வழங்குவதற்காக சூரிய ஒளி மின்சார தயாரிப்பிற்கான சோலார் பேனல்களும் இங்கு நிறுவப்பட்டுள்ளன. 


மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றம் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர். எஸ். குருசங்கர் பேசுகையில், “எமது மருத்துவமனையின் நிறுவனர் பிறந்த சொந்த ஊராக ஒரு சிறப்பு பிணைப்பை கொண்டிருக்கும் இக்கிராமத்தில் மாணவர்களுக்கு சிறப்பான கல்விக்கான அணுகுவசதியை ஊக்குவிக்கும் ஒரு மேன்மையான நோக்கத்திற்கு பங்களிப்பு வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கற்பித்தலுக்கான அனைத்து நவீன வசதிகளையும் மற்றும் அத்தியாவசிய அம்சங்களையும் கொண்டதாக கட்டிடத்தை நாங்கள் கட்டியிருக்கிறோம். இதுவரை அவர்களுக்கு இருந்த பாதுகாப்பு, கவலைகளுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு கல்வியின் மீது இனிமேல் மாணவர்கள் படிப்பின் மீது நன்றாக கவனம் செலுத்தலாம். பலப்புத்தகங்கள் இருக்கிற நூலகத்தையும் மற்றும் டிஜிட்டல் சாதனத்துடன் நிறுவப்பட்டுள்ள வகுப்பறைகளை மாணவர்கள் சிறப்பாக பயன்படுத்தி பயனடையலாம். இந்த நடுநிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தவும் அவசியமான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். உயர் வகுப்புகளில் சேரும் புதிய மாணவர்களை வரவேற்க தயாராக்குவதற்காக பள்ளியின் உட்கட்ட வசதிகளை நாங்கள் தொடர்ந்து விரிவாக்குவோம். கிராமப்பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள் பெரிய சாதனைகளை நிகழ்த்த வேண்டுமென்று ஆர்வத்தை பெறுவதற்கு இக்கல்வி ஊக்கமளிக்க வேண்டும் என்பதே எமது குறிக்கோளாகும். தங்களது கனவுகளை நிஜமாக்க தேவைப்படும் ஆதரவை அனைத்தையும் மாணவர்களுக்கு நாங்கள் வழங்குவோம்” என்று கூறினார்.


பள்ளிக்கட்டிட திறப்பு விழா நிகழ்வில் பஞ்சாயத்துகளின் அதிகாரிகளும், உறுப்பினர்களும், பள்ளியின் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். வாராப்பூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி. ஐ. மலர்விழி நாகராஜன், சிவகங்கை மாவட்டத்தின் செயல்திட்ட இயக்குநர் டாக்டர். ஏஆர். சிவராமன்; இம்மாவட்டத்தின் தலைமை கல்வி அதிகாரி திரு. பி. அம்பிகாபதி, தேவக்கோட்டை கல்வி மாவட்டத்தின் கல்வி அதிகாரி திரு. ஜி. சந்திரகுமார் மற்றும் கல்வியாளரான திரு. ஆர். சாமிநாதன் ஆகியோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. எஸ். அலமேலு மங்கை நன்றியுரையாற்றினார். 


இந்த நடுநிலைப்பள்ளியை மிக விரைவில் உயர்நிலைப்பள்ளியாகவும் மற்றும் அதன்பிறகு மேல்நிலைப்பள்ளியாகவும் உயர்த்துவதற்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது எட்டாம் வகுப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் அவர்கள் பள்ளிக் கல்வியை தொடங்குவதற்கு எஸ். புதூர் என்ற சிறு நகரத்திற்கு செல்ல மூன்று கிலோ மீட்டர் தூரம் பயணிக்கவேண்டியிருக்கிறது. மேலும் இச்சிறுநகரம் ஒரு குன்றின் மீது அமைந்திருக்கிறது; அங்கு செல்வதற்கு முறையான சாலை வசதியை உரிய கால அளவுகளில் இயக்கப்படும் பேருந்து சேவைகளும் இல்லை. எனவே, வாராப்பூரிலேயே மேல்நிலைப்பள்ளியை நிறுவவேண்டும் என்பதே கிராமத்து மக்களின் விருப்பமாகவும் மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நீண்டகால திட்டமாகவும் இருக்கிறது.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !