தமிழ்நாட்டு கைவினை மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் பழங்குடி கைவினைஞர்கள் குழு திருவிழா: ட்ரைஃபெட் அறிவிப்பு

Madurai Minutes
0

தமிழ்நாட்டில் எல்லை கடந்த பழங்குடி கைவினைஞர்கள் குழு திருவிழாவை நடத்தப்படும் என்று இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பான ட்ரைஃபெட் அறிவித்துள்ளது. தங்களது தனிச்சிறப்பு வாய்ந்த கைவினை திறனுக்காக திறமை வாய்ந்த பழங்குடி கைவினைஞர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நோக்கத்தோடு இந்த பிரத்யேக நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.


ஜூலை 17 தொடங்கி 27 வரை தமிழ்நாட்டின் கோத்தகிரி, உதகமண்டலம், ஏற்காடு, கொல்லிமலை, ஏலகிரி, ஜமுனா மரத்தூர் போன்ற இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். தங்களது தனிச்சிறப்பு வாய்ந்த கைவினை திறன்கள், பாரம்பரியங்கள் மற்றும் வியப்பூட்டும் திறமைகளை எடுத்துரைப்பதற்காக இத்திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு பன்முகப் பின்னணிகளைக் கொண்ட பழங்குடி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கைவினைப் பொருட்கள் துறையின் வடிவமைப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் ஒருங்கிணையும் வாய்ப்பையும்,  சந்தைப்படுத்துதல் போன்ற ஆதரவையும் குழு நடைமுறை வழங்கும்.


கைத்தறி துணி வகைகள், நகைகள், மர வேலைப்பாடுகள், மண்பாண்ட பொருட்கள் மற்றும் கண்கவர் ஓவியங்கள் போன்ற ஏராளமான பழங்குடி கலைப் பொருட்கள் இந்த திருவிழாவில் காட்சிப்படுத்தப்படும்.  இது போன்ற ஒவ்வொரு தயாரிப்பும் கலைத்திறமையின் வியப்பூட்டும் கதைகளை விவரிப்பதோடு, பழங்குடி மக்களின் தனிச்சிறப்புமிக்க அடையாளத்தையும், கலாச்சார சிறப்பையும் பிரதிபலிக்கும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !