மதுரை மாநகராட்சி மண்டலம் 5-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

Madurai Minutes
0

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட ஐந்து மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. 


அதன்படி எதிர்வரும் 18.07.2023 (செவ்வாய்கிழமை) திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் (தியாகராசர் பொறியியல் கல்லூரி செல்லும் வழி) உள்ள மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (மேற்கு) அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாண்புமிகு மேயர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. (மண்டலம் 5 (மேற்கு) உட்பட்ட வார்டு பகுதிகள்: வார்டு எண்.71 மாடக்குளம், வார்டு எண்.72 முத்துராமலிங்கபுரம்,  வார்டு எண்.73 முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, வார்டு எண்.74 பழங்காநத்தம், வார்டு எண்.78 கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, வார்டு எண்.79 தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, வார்டு எண்.80 வீரகாளியம்மன் கோவில் தெரு, வார்டு எண்.81 ஜெய்ஹிந்துபுரம், வார்டு எண்.82 சோலையழகுபுரம், வார்டு எண்.83 எம்.கே.புரம், வார்டு எண்.84 வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வார்டு எண்.91 மீனாட்சி நகர் அவனியாபுரம், வார்டு எண்.92 பாம்பன் சுவாமி நகர், வார்டு எண்.93 பசுமலை, வார்டு எண்.94 திருநகர், வார்டு எண்.95 சௌபாக்யாநகர், வார்டு எண்.96 ஹார்விப்பட்டி, வார்டு எண்.97 திருப்பரங்குன்றம், வார்டு எண்.98 சன்னதி தெரு, திருப்பரங்குன்றம், வார்டு எண்.99 பாலாஜி நகர், வார்டு எண்.100 அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய வார்டுகள்)  


இந்த குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறுமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.   

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !