Metabolic Encephalopathy மற்றும் Atypical Autoimmune parkinsonism/encephalitis நோய் பாதிப்பிருந்த 69 வயது நபருக்கு புதிய வாழ்க்கையை தந்திருக்கும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை

Madurai Minutes
0

தென் தமிழ்நாட்டின் முதன்மை மருத்துவமனையாகத் திகழும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் (MMHRC), Metabolic Encephalopathy மற்றும் Atypical Autoimmune parkinsonism/encephalitis நோய் பாதிப்பிருந்த 69 வயதான ஒரு ஆண் நோயாளிக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து குணப்படுத்தியிருக்கிறது.  


நீரிழிவு, சிறுநீரக நோய், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அவசியமாக இருந்த கரோனரி தமனி நோய், வீக்கமடைந்த புராஸ்டேட் சுரப்பி என பல்வேறு நோய் பாதிப்ப வரலாறை கொண்டிருந்த இந்நோயாளி, மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு வந்தார்.  மூளை செயல்பாட்டில் சிரமங்கள், தன்னிச்சையான நடுக்கங்கள், திடீரென ஏற்படும் தசை வெட்டியிழுப்புகள், நடப்பதில் சிரமம் மற்றும் மெதுவான நடமாட்டம் என பல்வேறு புதிரான அறிகுறிகள் கடந்த 3 முதல் 4 மாதங்களாக இருந்திருக்கின்றன.  


வேறிடங்களில் முதலில் சிகிச்சைக்கு சென்றபோது, சிகிச்சையில் குணப்படுத்த இயலாத பார்கின்சன் நோய் இவருக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  எனினும் இவரது நிலைமை தொடர்ந்து மோசமாகி வந்ததால், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் நிபுணத்துவ சிகிச்சையைப் பெறுவதே சிறந்தது என்ற முடிவுக்கு இவர் வந்தார்.  இம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன், நரம்பியல் நிபுணர் டாக்டர். S. நரேந்திரன், மூளை – நரம்பியல் துறை தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். T.C. விஜய் ஆனந்த் ஆகியோர் தலைமையில் பல்வேறு சிறப்பு பிரிவுகளை உள்ளடக்கிய மருத்துவ நிபுணர்களின் குழு இவரை பரிசோதித்து, இவருக்கான சிகிச்சை திட்டத்தை உருவாக்கியது. 


இந்த நோயாளிக்கு இருந்த பாதிப்பு தன்மையை விளக்கிய நரம்பியல் துறை சிறப்பு மருத்துவர் S. நரேந்திரன் கூறியதாவது: “பார்கின்சனிசம் என அழைக்கப்படுவது, நரம்பியல் சிதைவு கோளாறுகளின் ஒரு தொகுப்பாகும்.  உடல் மற்றும் மனம் சார்ந்த நடவடிக்கைகளில் தளர்ச்சியும், தொய்வும் ஏற்படுவதுடன், உடலில் அதிர்வுகளும், கீழே விழும் நேர்வுகளும் இப்பாதிப்பின்போது பொதுவாக இருக்கும்.  நிச்சயமாக குணம்பெறுதல் என்ற நிலை இல்லாத காரணத்தால், படிப்படியாக அதிகமாகக்கூடிய இப்பாதிப்பிற்கு மருந்துகளை கொண்டு மட்டுமே சிகிச்சை மேலாண்மை வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது.  எனினும், இதேபோன்ற அறிகுறிகள் உள்ள குறிப்பிட்ட சில நரம்பியல் கோளாறுகள் மிக வேகமாக வளர்ச்சியடையும்.  மூளை வீக்கம்  மற்றும் Atypical Autoimmune பார்கின்சன் நோய் குழுமத்தை சேர்ந்தவையாக இவைகள் இருக்கின்றன.  அவர்களது இரத்தத்தில் கண்டறியக்கூடிய ஆன்ட்டிபாடிகள் காணப்படும்.  இந்நோயாளிக்கு இதற்கு முன்பு விவரணை செய்ய முடியாத அறிகுறிகள் இருந்திருக்கின்றன.  இமேஜிங் மற்றும் PET சோதனைகளும் இவருக்கு மேற்கொள்ளப்பட்டன.  இதற்கு முன்பு விவரணை செய்யப்படாத ஒரு புதிய எதிர்ப்புயிரி இவருக்கு இருப்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.  இவையெல்லாம் சேர்ந்து இந்நோயாளியை குணப்படுத்துவதற்கு எங்களுக்கு உதவியிருக்கின்றன.” 


நரம்பியல் துறையின் தலைவரும் மற்றும் முதுநிலை நிபுணருமான டாக்டர். T.C. விஜய் ஆனந்த் மேலும் விளக்குகையில், “இங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போது, குமட்டல், பொதுவான உடல் நடுக்கங்கள் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பதாக இந்நோயாளி தெரிவித்தார்.  இவருக்கு செய்யப்பட்ட விரிவான மருத்துவ பரிசோதனைகளில் இரத்தத்தில் சோடியத்தின் அளவு குறைவாக இருப்பது தெரிய வந்தது.  இது Hyponatremia என அழைக்கப்படுகிறது.  Antidiuretic hormone என அழைக்கப்படும் ஒரு ஹார்மோனில் உள்ள சமநிலையின்மையோடு இது தொடர்புடையது.  இதனால், வழக்கம்போல சிறுநீர் வெளியேற்றுவதற்குப் பதிலாக, உடல் நீரை தக்கவைத்துக் கொள்ளும் விளைவு ஏற்படும்.  இது உடலின் எலெக்ட்ரோலைட்  சமநிலையை, குறிப்பாக சோடியம் அளவுகளை சீர்குலைக்கும்.  கூடுதலாக, இரத்த சிவப்பு அணுக்கள் குறைவாக இருக்கும் இரத்தசோகை பாதிப்பும் இந்நோயாளிக்கு இருந்தது.  மூளையில் செய்யப்பட்ட இமேஜிங் சோதனை பிறழ்வுகள் ஏதுமற்ற இயல்பானதாகவே இருந்தது.  மூளை முதுகுத்தண்டு நீரை மேலும் பரிசோதித்த போது வெள்ளை இரத்தஅணுக்களும், புரத அளவுகளும் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது.  Paraneoplastic encephalitis, மற்றும் autoimmune encephalitis உட்பட, பல்வேறு சாத்தியமுள்ள நோயறிதல் முடிவுகளை பரிசீலிப்பதற்கு இந்த ஆய்வு முடிவுகள் தூண்டின.” என்று கூறினார்.  


இவரது பாதிப்பிற்கு உறுதியான காரணத்தை நிலைநாட்டுவதற்காக ஒரு நுட்பமான நோயறிதல் செயல்முறை மருத்துவர்கள் குழுவால் தொடங்கப்பட்டது.  PET CT ஸ்கேன்கள் வழியாக செய்யப்பட்ட மேம்பட்ட இமேஜிங் பரிசோதனை , மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் வழக்கத்திற்கு மாறான வளர்சிதைமாற்றச் செயல்பாட்டை வெளிப்படுத்தின.  தன்தடுப்பாற்று மூளை அழற்சி நோய்க்கான சாத்தியமிருப்பதை இது சுட்டிக்காட்டியது.  இதைத்தொடர்ந்து, ஸ்டீராய்டுகள், சிரை ஊடாக செலுத்தப்படும் இமுனோகுளோபிளின்கள் (IVIG), plasmapheresis மற்றும் Rituximab ஊசி மருந்து ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான செயல்உத்தியை பல்வேறு மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய குழு இந்நோயாளிக்காக வடிவமைத்தது.   மிக கவனமாக திட்டமிடப்பட்ட இந்த அணுகுமுறையானது, நோயாளியின் நிலைமையில் கணிசமான முன்னேற்றம் ஏற்படுவதற்கு வழிவகுத்தது. 


டாக்டர். S. நரேந்திரன் மேலும் பேசுகையில், “மருத்துவ நோயறிதலிலும், சிகிச்சையிலும் அதுவும் குறிப்பாக, நுட்பமான, அரிதான மருத்துவ பாதிப்பு நிலைகளை மேலாண்மை செய்வதில் துல்லியமான விளிம்பு நிலையின் முக்கியத்துவத்தை இந்த நேர்வு கோடிட்டுக் காட்டுகிறது.  உறுதியான சான்றுகளின் அடிப்படையிலான மருத்துவம் மற்றும் நோயாளியின் நலனை மையமாக கொண்டு வடிவமைக்கப்படும் சிகிச்சை பராமரிப்பில் நாங்கள் கொண்டிருக்கும் தளராத பொறுப்புறுதி, இந்த அரிதான, நுட்பமான நோயாளிக்கான சிகிச்சை நேர்வில் நேர்மறையான சிகிச்சை விளைவுகளை அடைவதில் மிக முக்கிய பங்காற்றியிருக்கிறது.” என்று குறிப்பிட்டார். 


MMHRC-ன் மருத்துவர் மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர். B. கண்ணன் பேசுகையில், “இந்த சிக்கலான நேர்வில் வெற்றிகர சிகிச்சை மேலாண்மை, மீனாட்சி மிகச்சிறந்த சிகிச்சை பராமரிப்பை வழங்குவதில் மிஷன் மருத்துவமனையின் முழுமையான அர்ப்பணிப்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.  மூளை நரம்பியல் துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் முன்னணி சிறப்பு நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட எமது அணுகுமுறை பல்வேறு துறைகளை உள்ளடக்கிய ஒத்துழைப்பு நடவடிக்கையாக இருந்தது.  நோயாளியின் நலவாழ்வு மற்றும் மேம்பட்ட சிகிச்சையை வழங்குவதில் எங்களது குறிக்கோள் மற்றும் செயல்பாட்டிற்கு நேர்த்தியான சாட்சியமாக இது திகழ்கிறது.” என்று கூறினார். 


தனது நன்றியை வெளிப்படுத்திய இந்நோயாளி, “எனது நோய் பாதிப்பிற்கான காரணத்தை சரியாக கண்டறியவும் மற்றும் அதற்கு தீர்வு காணவும், மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் வெளிப்படுத்திய உறுதியான அர்ப்பணிப்பிற்கும், உயர்தர சிகிச்சைக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது நிபுணத்துவமும், நோய்களை குணப்படுத்தி, நோயாளிகளின் நலனை உறுதி செய்வதில் அவர்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புமே எனது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை தந்திருக்கிறது.  எனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்க உதவியிருக்கிறது.” என்று கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !