தமிழக சிறை காவலர்களின் குழந்தைகள் தேசிய கராத்தே சாம்பியன்ஷிப்பில் பதக்கங்கள் குவிப்பு

Madurai Minutes
0

தமிழக சிறைத்துறை டிஜிபி திரு அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ் அவர்கள் சிறை காவலர்களின் குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சிகள் மற்றும் தற்காப்பு கலைகள் பயிற்சி அளிக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் அனைத்து மத்திய சிறைகளிலும் விளையாட்டுப் பயிற்சிகள் மற்றும் தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.


எட்டாவது அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் 2023-2024 காண போட்டிகள் ஹரியானா மாநில கராத்தே அசோசியேஷன் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை ஹரியானா மாநிலம் சார்பாக குருச்சேத்திரா யுனிவர்சிட்டியில்  கடந்த 25ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்றது.


இந்த போட்டியில் கலந்து கொள்ள தமிழகத்தில் இருந்து சென்ற சிறை காவலர்களின் குழந்தைகள் 8 பேர் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று சாதனை புரிந்து இன்று தமிழகம் திரும்பியுள்ளனர்.


புழல் மத்திய சிறையைச் சார்ந்த சிறை பணியாளர்களின் குழந்தைகள் 6 பேர், மதுரை மத்திய சிறையை சேர்ந்த சிறை பணியாளர் குழந்தைகள் இரண்டு பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.


இவர்களுக்கு சிறை காவலர் திரு ராஜரத்தினம் மற்றும் மாரி செல்வம் ஆகியோர் சிறப்பான பயிற்சி அளித்து ஹரியானா மாநிலத்திற்கு அழைத்துச் சென்று வெற்றி வாகை சூடி திரும்பியுள்ளனர்.


தமிழகம் திரும்பிய இவர்கள் அனைவரையும் சிறைத்துறை தலைமையகத்தில்  சிறைத்துறை  டிஜிபி திரு அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ் அவர்கள் நேரில் வரவழைத்து தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.


இனிவரும் காலங்களில் அதிக அளவிலான சிறை காவலர்களின் குழந்தைகள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்


25/08/23 முதல் 27/08/23 வரை  தேசிய அளவிலான போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது அதில் நமது மாணவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கலந்து கொண்டு  பதக்கங்களை வென்றனர் என்பதை பணிந்து தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி .


NATIONAL CHAMPIONSHIP 2023 HARYANA, KURUKSHETRA UNIVERSITY 


KARATE ASSOCIATION OF INDIA 


Medal Winners


Kata Event


CP Puzhal Karate class 


1.S. Loganesh - GOLD

2.S.M Nandhana - BRONZE

3.R. Chokith Kumaran - SILVER

4.R. Suruthi Ratna Harini - GOLD


Kumite Event

5.S.M Thayanth - BRONZE

6.A. Nasreen Nisha - GOLD


CP Madurai Karate class 

P.Hari Prasad - Bronze

P.Shri charan - GOLD

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !