மதுரை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

Madurai Minutes
0

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் மதுரையில், 77வது சுதந்திர தினத்தை "தேச விழா முதன்மை விழா என்ற கருப்பொருளில், 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" இன் ஒருங்கிணைந்த பகுதியாக 15 ஆகஸ்ட் 2023 அன்று மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. காலை 8.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியை மதுரை வளாக இயக்குநர் பேராசிரியர் முனைவா எம்.புஷ்பராணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 


மதுரை வளாக இயக்குநர் பேராசிரியர் முனைவர். எம்.புஷ்பராணி, "தேசிய வளர்ச்சியும், மாணவர் கடமையும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். வளாகத்தில் அனைத்துத் துறை மாணவ, மாணவியர் பங்கேற்றனர். விழாவில் மாணவிகள் தங்களது பேச்சு, பாட்டு, கட்டுரை மற்றும் குழுப் பாடல் ஆகிய கலை நிகழ்ச்சிகள் மூலம் தேசப்பற்றையும் அதில் தமக்குள்ள ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். ஒற்றுமையின் உணர்வை மேம்படுத்துதல் மற்றும் கொண்டாடுதல், சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக 11 ஆகஸ்ட் 2023 முதல் 15 ஆகஸ்ட் 2023 வரை மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 


சுதந்திர தினத்தன்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது, கணினியியல் நிலாபாரதி துறை முதுகலை மாணவி நன்றியுரை வழங்கினார். அனைத்து மாணவர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றுது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !