மதுரை மத்திய சிறையில் IADVL சார்பாக சிறப்பு தோல் சிகிச்சை முகாம்

Madurai Minutes
0

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்து சிறைகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் சிறை வாசிகளுக்கு நடத்த அரசு ஆணையிட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் இந்திய தோல் மற்றும் தொழுநோய் நிபுணர்கள் சங்கம் ( IADVL) சார்பாக   சிறைவாசிகளுக்கு தோல் மற்றும் பால்வினை நோய்கள் தொழுநோய் நோய் கண்டறிதல் மற்றும் சிறப்பு சிகிச்சை முகாம் ஆகியவை நடத்த சிறைத்துறை டிஜிபி திரு அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.


அதன் அடிப்படையில் இன்று மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனி சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மதுரை மத்திய சிறையில் இன்று ஐ ஏ டி ஏ வி எல் (IADVL) மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.  இந்த மருத்துவ முகாமினை சிறைத்துறை மதுரை சரக டி ஐ ஜி திரு பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் பொறுப்பு திரு பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.


மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகள் 125 நபர்களுக்கும் விசாரணை சிறைவாசிகள் 120 நபர்கள் ஆக மொத்தம் 245 சிறைவாசிகள்  கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். பெண்கள் தனி சிறையில் எட்டு தண்டனை சிறைவாசிகளும் 16 விசாரணை சிறைவாசிகளும் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !