மதுரை அய்யர்பங்களா சந்திப்பில் புதிய போக்குவரத்துச் சமிக்கை, போக்குவரத்துச் சாவடி திறப்பு

Madurai Minutes
0

இன்று (28.08.2023) மதுரை தல்லாகுளம் போக்குவரத்து காவல் நிலையதுக்குட்பட்ட அய்யர்ப்பங்களா சந்திப்பில் புதிய போக்குவரத்துச் சமிக்கை (Traffic Signal) மற்றும் போக்குவரத்துச் சாவடியை  (Traffic Outpost) மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்.  J.லோகநாதன் IPS., அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.  


மதுரை மாநகரில் முதன்முறையாக பொது மக்கள் நலன்கருதி சிக்னலில் காத்திருப்போர் மனதை அமைதிபடுத்தும் விதமாக இனிமையான மெல்லிசையுடன் கூடிய போக்குவரத்து விழிப்புணர்வு ஒலிப்பதிவுகள் வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து நடைபெற்ற தலைகவசம் விழிப்புணர்வு பேரணியை காவல் ஆணையர் கொடியசைத்து துவங்கி வைத்தார். 

இந்த பேரணியில்  100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தலைகவச விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அந்த சாலையில் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல் ஆணையர் அவர்களால் புதிய தலைகவசம் இலவசமாக வழங்கபட்டும், பொதுமக்களுக்கு துண்டுபிரசுரம் மூலமாக தலைகவசத்தின் முக்கியத்துவம் & சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  


இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து)  திரு.குமார், உதவி ஆணையர்கள் திரு.செல்வின் , திரு.மாரியப்பன்  மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !