தமிழ், தெலுங்கில் அசத்தி வரும் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர்!

Madurai Minutes
0

இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தனது சமீபத்திய படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருபவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் மிக பிஸியான இசை அமைப்பாளராக வலம் வருகிறார். இவரது இசையில் வெளியான சீதா ராமம் திரைப்படம் சைமா விருது பெற்றுள்ளது அதுமட்டுமின்றி தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்து வரும் இவரது இசையில் சித்தார்த் நடித்துள்ள சித்தா படத்தின் பின்னனி.  இசை ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தனது அடுத்தடுத்த படங்களின் மூலம் இன்னும் ரசிகர்களை மகிழவிக்க தயாராகி வருகிறார்.


அடுத்தடுத்த ஒப்பந்தமாகியுள்ள பணிகள் பற்றி கேட்டபோது, குக்கு எஃப் எம் என்ற ஆப் ஆடியோ புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அதில் சமீபத்தில் வெளியான ‘லாக்கப்' என்ற ஆடியோ புத்தகத்திற்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. அடுத்ததாக பொன்னியின் செல்வன் காலத்துக்கு முன் சோழ தேசத்தை ஆட்சி செய்த அரசன் கரிகாலன் பற்றி ஆராய்ச்சி செய்து ஒருவர் எழுதிய கதை ஒன்பது எபிசோடுகளாக வரவிருக்கிறது. அந்த ஆடியோ புத்தகத்தை கண்ணை மூடி கேட்டால், ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது பார்ப்பதுபோல் அதாவது பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பதுபோல் உணரவைக்கும். அதற்கு இசையமைக்கிறேன். இயக்குனர் திரு இயக்கத்தில் புதிய படத்திற்கும் இசை அமைத்து வருகிறார்.

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் ‘திரு மாணிக்கம்' படத்திற்கு இசையமைக்கிறேன்'' என்றார். நாளை வெளியாக உள்ள சித்தா படத்திற்கும் இவர் நான் இசை. சித்தா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !