மதுரையில் ஆட்டோ எக்ஸ்போ-2023 நாளை துவக்கம்

Madurai Minutes
0

தமிழ்நாடு ஆட்டோமொபைல் மற்றும் அலைடு இண்டஸ்ட்ரீஸ் பெடரேஷன் மற்றும் தமிழ்நாடு மோட்டார் பார்ட்ஸ் வியாபாரிகள் சங்கம் சார்பாக மாநில அளவிலான ஆட்டோ எக்ஸ்போ- 2023 (AUTO EXPO) கண்காட்சி தமுக்கம் மைதானத்தில் நாளை (30-ந் தேதி) துவங்கி அக்டோபர் 1 , 2 ஆகிய தேதிகள் வரை நடைபெற உள்ளது.


இந்த கண்காட்சியில் வாகனங்கள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களின் குறித்து பொதுமக்கள் பார்வைக்காக மிகப் பிரமாண்டமாக காட்சிப்படுத்தபடவுள்ளது.


இக்கண்காட்சியில் வாகன சந்தையில் புதிய மாடல்களில் வந்துள்ள இருசக்கர, மூன்று சக்கர வாகனங்கள், கார்கள், லாரிகள், டிராக்டர்கள், இ-பைக் மற்றும் அனைத்து ரக வாகனங்களின் உதிரிபாகங்கள் டயர். டியூப், பேட்டரி, பேரிங், ஆயில், சுவிட்ச்கள், பல்புகள், கேபிள்கள், ஓர்க்ஷாப் டூல்ஸ், டையக்னாசிஸ் மெஷின் மற்றும் அக்ஸசரீஸ் பாகங்கள் அகியவற்றை தெரிந்து கொள்ள ஒரே இடத்தில ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள்,   அனைவரும் வருகை தந்து பயன்பெற வேண்டும் என தமிழ்நாடு மோட்டார் பார்ட்ஸ் வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !