முகூர்த்தநாள், விடுமுறை தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: மதுரை போக்குவரத்து கழகம் தகவல்

Madurai Minutes
0

மேலாண் இயக்குநர் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட்., மதுரை அவர்களிடமிருந்து பத்திரிக்கை செய்திக்குறிப்பு :-


சுபமுகூர்த்த நாள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதை முன்னிட்டு 08.09.2023 முதல் 09.09.2023 வரை சென்னையில் இருந்து 100 பேருந்துகளும், பல்வேறு இடங்களுக்கு (திருச்சி, சேலம். ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு) 100 பேருந்துகளும் மற்றும் வார விடுமுறை முடிந்து 10.09.2023 ஞாயிறு மற்றும் 11.09.2023 திங்கட்கிழமை அன்று ஊர் திரும்ப ஏதுவாக மதுரை கோட்டத்திற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு 100 பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களுக்கு 120 பேருந்துகளும் பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


மேலும் இப்போக்குவரத்துக் கழகம் மூலம் கொடைக்கானல், கொல்லம், மூணாறு, திருப்பூர், கோவை, மேட்டுப்பாளையம், ஈரோடு. சேலம், நாகர்கோவில், திருசெந்தூர், நெய்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், மன்னார்குடி, கடலூர் மற்றும் நாகூர் வழித்தடங்களில் பொது மக்கள் மற்றும் பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் (OTRS) https://www.tnstc.in/home.html website முன்பதிவு மூலம் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


மேலும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டும், பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும் ஏதுவாக பயணிகளுக்கு வழிகாட்டவும் சிறப்பு பேருந்துகளை கண்காணிக்கவும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் / பொறியாளர்கள் / கண்காணிப்பாளர்கள் பணியாளர்கள் மற்றும் பயணசீட்டு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !