திண்டுக்கல் தலப்பாகட்டி 101வது கிளையாகவும் மதுரை சிந்தாமணியில் 4வது கிளையாகவும் திறப்பு விழா

Madurai Minutes
0

தூத்துக்குடி- சென்னை பைபாஸ் ரோடு,வேலம்மாள் மருத்துவமனை அருகில் திண்டுக்கல் தலப்பாகட்டி 101வது கிளையாகவும், மதுரை சிந்தாமணியில் 4வது கிளையாகவும் திறப்பு விழா நடைபெற்றது.


இதில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை சிட்டி, போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் திரு . D.குமார், தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க மாநில தலைவர் டாக்டர். செந்தில், மதுரை அக்ரோ ஃபுட் ட்ரேட் சென்டர் நிறுவனர் திரு. ரத்தினவேலு, மாணிக்கம் என்டர்பிரைசஸ் உரிமையாளர் திரு.& திருமதி. ஜீவகன், மதுரை மாவட்ட fssai அலுவலக அதிகாரி திரு.ஜெயராம் பாண்டியன், தி அமெரிக்கா கல்லூரி முதல்வர். திரு.தவமணி கிறிஸ்டோபர், மதுரை இந்தியன் பேங்க் மண்டல தலைமை திரு. பாலசுப்பிரமணியன், suxus மென்ஸ் வேர் உரிமையாளர் திரு. பைசல் அஹமத் மற்றும் மாலை முரசு சேனல் ஹெட் திரு.மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் அரசு அதிகாரிகள் , தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 


 புதிய கிளை திறப்பு விழா குறித்து திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியின் நிர்வாக இயக்குனர், திரு. சதீஷ் என்கின்ற நாகசாமி தனபாலன் கூறியதாவது: எங்களது முதலாவது கிளை 1957 தொடங்கிய 67 வருட பாரம்பரிய மிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி திண்டுக்கல்லில் ஆரம்பித்து கோவை திருப்பூர், ஈரோடு, சென்னை போன்ற தமிழகத்தின் அனைத்து பெருநகரங்களிலும், கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களிலும், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற ஏழு வெளிநாடுகளில் திண்டுக்கல் தலப்பாகட்டி உள்ளது. இந்திய அளவில் நம்பர் ஒன் பிரியாணி பிராண்ட் நிறுவனம் திண்டுக்கல் தலப்பாகட்டி. 


இப்பொழுது 101வது கிளையாகவும், மதுரை சிந்தாமணியில் 4வது கிளையாகவும் துவங்கப்பட்டுள்ளது. எங்களது நிறுவனத்தின் நோக்கமே தமிழ்நாட்டு பாரம்பரிய உணவு வகைகளை உலகம் எங்கும் கொண்டு சேர்ப்பதே எங்களது இலக்கு. நாங்கள் தயார் செய்யும் உணவு முறைகளை இதுவரை ரகசியமாக பாதுகாத்து வருகிறோம். பாரம்பரிய முறையில் இயற்கையான மசாலா பொருட்களால் சமைக்கப்பட்ட பிரியாணி உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் மற்றும் சைவ பிரியர்களுக்கு தனியே மீல்ஸ் உள்பட பல வெரைட்டி உணவுகளும் உள்ளன. மேலும் வெகு விரைவில் பெங்களூர், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் 10 கிளைகளை துவங்க உள்ளோம் என தெரிவித்தார். 


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !