மதுரையில் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன், டாக்டர் மாதவன் ஹார்ட் சென்டர் சார்பாக சிறப்பு இருதய மருத்துவ முகாம்

Madurai Minutes
0

உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே நகர் சுந்தரம் பூங்காவில் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன் மற்றும் டாக்டர் மாதவன் ஹார்ட் சென்டர் சார்பாக சிறப்பு  இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது. 


இருதய சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மாதவன் முன்னிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேல் முகாமை  தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக இருதய நிபுணர்கள் டாக்டர் அண்ணாமலைசாமி மற்றும்  டாக்டர் முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த இலவச இருதய பரிசோதனை முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 


மேலும் மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி சிகிச்சை சி.பி.ஆர் பயிற்சி குறித்தும்  செய்து காட்டினர்.  ஆரோக்கிய இருதயத்திற்கான குறிப்புகளும் தரப்பட்டது. முன்னதாக இருதய நோய் பற்றிய விழிப்புணர்வு பேரணியில் 150 மாணவர்கள் ஸ்கேட்டிங் செய்து  விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் டாக்டர் விஜயராமன்   நன்றி கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !