மதுரையில் ராம்ராஜ் காட்டன் ரூபாய் 100000 திருமண பட்டு வேட்டி அறிமுகம்

Madurai Minutes
0

ராம்ராஜ் காட்டனின் வேஷ்டி சட்டைகள் இந்தியா முழுவதும் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிறுவனம் இதன் டீலர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கான கூட்டத்தை வரும் 19ந்தேதி மதுரையில் உள்ள கோர்ட்யார்ட் மேரியாட் ஓட்டலில் நடத்த இருக்கிறது. அப்போது இந்த நிகழ்ச்சியில் மிகவும் விலை உயர்ந்த பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் 1 லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டு வேஷ்டியை அறிமுகம் செய்ய உள்ளது.


இந்த வேட்டிகள் மிகவும் கவனத்துடன், சுத்தமான தங்கத்தின் மிகச்சிறந்த நூல்களைப் பயன்படுத்தி கையால் நெய்யப்பட்டு, ஆடம்பரம் மற்றும் நேர்த்தியுடன் ஒப்பிடமுடியாத உணர்வை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு இருப்பதாக ராம்ராஜ் காட்டன் தெரிவித்துள்ளது.


இது குறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவரும். தொலைநோக்கு சிந்தனையாளருமான கே.ஆர். நாகராஜன் கூறுகையில், பட்டு ஆடைகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகளும், அவை எப்படி நமது உடலையும் மனதை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது என்பது குறித்தும் தெரிவித்தார். மேலும், மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த வேட்டிகள் மதுரையில் உள்ள ராம்ராஜ் ஷோரூம்களில் விரைவில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


விழாவின் முக்கிய நிகழ்வாக மதுரை ராஜ் மஹால் சில்க்ஸ் ரெடிமேட்ஸ் உரிமையாளர் திரு. முருகானந்த் அவர்கள் ரூபாய் 100000 பட்டு வேட்டியை அறிமுகம் செய்து வைத்தார்.


திருமணங்கள் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் பெண்கள் மட்டுமே பட்டு ஆடைகளை உடுத்த வேண்டும் என்ற நீண்ட பாரம்பரியத்தை உடைத்து அவற்றை ஆண்களும் அணியலாம் என்று அவர்களுக்கான பல்வேறு விதமான பட்டு ஆடைகளை ராம்ராஜ் காட்டன் அறிமுகம் செய்தது. அவை இன்றைய சமுதாயத்தினர் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.


அந்த வகையில் இந்நிறுவனம் ஆண்களுக்கான பட்டு வேட்டிகள் மற்றும் பட்டு சட்டைகளை அறிமுகம் செய்தது. இந்த அற்புதமான பட்டு ஆடைகள் தங்கள் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களின் இதயங்களைக் கவர்வதோடு அவர்களிடம் மிகுந்த வரவேற்பையும் பெறும் என்று கே.ஆர். நாகராஜன் தனது அசைக்க முடியாத நம்பிக்கையை அப்போது வெளிப்படுத்தினார். அவரது நம்பிக்கைக்கு ஏற்ப ராம்ராஜின் காலத்தால் அழியாத பாரம்பரிய பட்டு ஆடைகள் இந்தியா முழுவதும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதோடு. பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


விழாவில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு அருண் ஈஸ்வர் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் திரு அஸ்வின் உடனிருந்தனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !