தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்

Madurai Minutes
0

தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள்  நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


இவ்வறிவிப்பிற்கிணங்க பேரறிஞர் அண்ணா அவர்களின்  பிறந்தநாளையொட்டி, 12.09.2023 அன்று பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும்,  கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும் தனித்தனியே  பேச்சுப் போட்டிகள் மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்திலுள்ள கூட்டரங்கில்  நடத்தப்பட்டன.  அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 42 மாணவர்களும், அரசு / தனியார் / அரசு உதவி பெறும்  கலைக் கல்லூரிகள் / பொறியியல் கல்லூரிகள்/  பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் 10 மாணவர்களும்  இப்பேச்சுப்போட்டிகளில்  பங்கேற்றனர்.   


பள்ளி - பேச்சுப்போட்டியில் கூடக்கோயில் நாடார்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவி சௌ.சௌமதி முதல்பரிசாக ரூ.5000/-, கூடல்நகர் புனித அந்தோனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி தெ.வர்ஷினி இரண்டாம் பரிசாக  ரூ.3000/-, மதுரை, செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவி  நா.நந்தினி, மூன்றாம் பரிசாக ரூ.2000/- வென்றனர். காங்கேயநத்தம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி பா.ரதிஷ்கா, பொய்ககரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும்  மாணவன் நா.மணிகண்டன் ஆகியோர் அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பரிசு ரூ.2000/-  வென்றனர். 


பள்ளிப் போட்டிகளுக்கு, மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திருமதி ச.நந்தினி, பேரையூர் காந்தி நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி  முதுகலை தமிழாசிரியர் திருமதி மா.ப.அங்காளஈஸ்வரி, அ.வல்லாளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் திருமதி இரா.சாந்தி ஆகியோர் நடுவர்களாகப் பணிபுரிந்தனர். 


கல்லூரி –  மாவட்ட அளவில் பாத்திமா கல்லூரி மாணவி செ.ராஜேஸ்வரி முதல் பரிசாக ரூ.5000/-, மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவி பா.ராஜஸ்ரீ இரண்டாம் பரிசாக ரூ.3000/- கப்பலூர் அரசு கலைக் கல்லூரி மாணவி  சு.பிருந்தா மூன்றாம் பரிசாக ரூ.2000/-  வென்றனர். 


கல்லூரிப் போட்டிகளுக்கு, மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரி தமிழ் உயராய்வுமைய இணைப்பேராசிரியர் முனைவர் பா.சிங்காரவேலன், மதுரை திருமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப்பேராசிரியர்   முனைவர் பெ.சுமதி,  மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் ஆய்வுவளமையர் முனைவர் ஜ.ஜான்சிராணி ஆகியோர் நடுவர்களாகப் பணிபுரிந்தனர். 


வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்  மாவட்ட ஆட்சியர் அவர்களால் பின்னர் வழங்கப்படும் என மதுரை மாவட்டத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் (பொ) முனைவர் ம. சுசிலா அவர்கள் தெரிவித்தார். 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !