மதுரையில் 4 நாட்கள் ஹெலிகாப்டர் சுற்றுலா துவக்கம்

Madurai Minutes
0

ஏரோ டான் மற்றும் மை பிளை ஸ்கை நிறுவனம் மூலம் வரும் 24ம் தேதி வரை 4 நாட்களுக்கு மதுரையை ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். இச்சேவையானது விமான நிலையம் பின்புறம் நான்கு வழிச்சாலையில் சின்ன உடைப்பு அருகே உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் இருந்து இந்த வான்வழி ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் செயல்படுத்த ஹெலிகாப்டர் ஆந்திர மாநிலம் கர்நூலிலிருந்து இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. மதுரை வான்வெளி சுற்றுலா ஹெலிகாப்டர் சேவையை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீஸ்வரன் துவக்கி வைத்தார். 


சென்னையைச் சேர்ந்த ஏரோ டான் நிறுவனம் தொழில் வளர்ச்சி அதிகாரி சுகுமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்:


இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் பொது மக்களை வான்வெளி சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்து வருகிறோம். இதில் ஒரு பகுதியாக மதுரையில் இருந்து வான் வெளி ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் செல்ல நாளை முதல் வரும் 24ம் தேதி வரை காலை 9 மணியிலிருந்து 4 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மதுரையை சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மேம்படுத்த ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை சுற்றியுள்ள பகுதிகளை இதன் மூலம் 15 நிமிடங்களில் கண்டு ரசிக்கலாம். இதற்காக கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ 6000 ஆகும் ரூபாய், ஒரு முறை ஆறு பேர் பயணம் செய்யும் சிறிய வகை ஹெலிகாப்டர் மூலம் மதுரை மற்றும் மதுரையில் சுற்றி சுற்றுப்புற பகுதிகளை 10 நிமிடங்கள் சுற்றிவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஏழு முறை இயக்க முடிவு செய்துள்ளோம் என்றார். 


மை ஸ்கை பிளை இயக்குனர் பிரேம் குமார் கூறுகையில்: 


ஏற்கனவே எங்களது நிறுவனம் சென்னை திருப்பதி பெங்களூர் போன்ற பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் வான்வெளி சுற்றுலா நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளது. தற்போது மதுரையில் இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம். மதுரை தென் மாவட்டங்களில் முக்கியமான இணைப்பு நகரமாக உள்ளது. இனி வரும் காலங்களில் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் கன்னியாகுமரி மற்றும் கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் இத்திட்டத்தை இங்கு செயல்படுத்துகிறோம்.


மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சக ஒப்புதலுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மதுரை விமான நிலைய அதிகாரிகளின் உத்தரவுப்படி விமான வான் வழி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பயணம் செய்ய விரும்பும் சுற்றுலா பயணிகள் இணையதளம் மூலம் பதிவு செய்து பயணிக்கலாம். பயணத்திற்கு அரை மணி நேரம் முன்பாக வர வேண்டும் இதுவரை 120 பயணிகள் மதுரையை ஹெலிகாப்டர் சுற்றுலா மூலம் சுற்றி பார்க்க முன்பதிவு செய்துள்ளார். 


மேலும் முன்பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக விமான நிலையம் அருகில் உள்ள நகரத்தினம் அங்காளம்மன் கல்லூரியில் டிக்கெட் பெற்று அதன் மூலம் ஹெலிகாப்டர் சவாரி செய்யலாம். இச்சுற்றுலா மூலம் மதுரை வான் வெளி ஹெலிகாப்டர் சுற்றுலா உலகில் உள்ள சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் என்றார். மை ஸ்கை பிளை இயக்குனர்கள் வெங்கடேஷ் பிரேம்குமார் ராஜா ஆகியோர் ஏரோ டான் நிறுவனத்துடன் இணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !