அன்னை பாத்திமா கல்லூரியில் அலெக்சா 2கே23 - கம்ப்யூட்டர் கருத்தரங்கம்

Madurai Minutes
0

திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அலெக்சா 2கே23 என்ற கம்ப்யூட்டர் கருத்தரங்கம் கம்ப்யூட்டர் துறை சார்பில் கல்லூரி சேர்மன் எம்.எஸ். ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரது அனுமதியின் பேரில் நடைபெற்றது.


கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் கார்த்திகா வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கை துவக்கி வைத்து உரையாற்றிய கல்லூரி முதல்வர் டாக்டர். அப்துல் காதிர், கம்ப்யூட்டரை தவிர்த்து மனிதன் வாழ இயலாத சூழல் உருவாகியுள்ளது எனவும் கம்ப்யூட்டர் துறையில் அடுத்த கட்ட முன்னேற்றமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது எனவும் இதன் மூலம் பல்வேறு வேலைகளை மிகவும் துல்லியமாகவும், துரிதமாகவும் செயலாற்ற இயலும் என்பதால்  மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையில்  தங்களது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார். 


பின்னர் கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அனைத்துக் கல்லூரி மாணவர்கள்  தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை வாசித்தும், தாங்கள் தயாரித்துக் கொண்டு வந்த போஸ்டர் மற்றும் கம்ப்யூட்டர் மாடல்களையும்  காட்சிப்படுத்தினர். கருத்தரங்கில் நடத்தப்பட்ட பேஸ் பெயிண்டிங், டெக்னோ குவிஸ், பேஷன் பேரேடு, ஆஸ் யூ லைக் இட் போன்ற போட்டிகளில் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். 


உணவு இடைவெளிக்குப் பின் நடந்த அமர்வில் விஜய் டிவி புகழ் அருண் மற்றும் அரவிந்த் கலந்து கொண்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வு உரையை நிகழ்த்தினர். 


இக்கருத்தரங்கில் மதுரை சேர்ந்த அமெரிக்கன் கல்லூரி, அரசு மீனாட்சி பெண்கள் கல்லூரி, சுப்பலட்சுமி கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, ஆக்சிலியம் கல்லூரி, கே. எல். என். கல்லூரி, சௌராஷ்ட்ரா கல்லூரி, எஸ் ஆர் எம் கல்லூரி, மங்கையர்கரசி பெண்கள் கல்லூரி, அருள் ஆனந்தர் கல்லூரி, சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி,  ராஜபாளையம் ராஜூஸ் கல்லூரி, ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.எம். எம். பெண்கள் கல்லூரி, உத்தமபாளையம் ஹாஜி கருத்த இராவுத்தர் கல்லூரி, கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் கலைக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில்  250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட 450க்கும் மேற்பட்டவர்களும், 70க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.


கருத்தரங்கில் கலந்து கொண்ட கல்லூரிகளில் அதிகமான போட்டிகளில் வெற்றி பெற்ற மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி முதல் பரிசையும் அமெரிக்கன் கல்லூரி இரண்டாம் பரிசையும் வென்றன. வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு விஜய் டிவி புகழ் அருள் மற்றும் அரவிந்த் கல்லூரியின் நிர்வாக மேலாண்மைத்துறை இயக்குனர் நடேச பாண்டியன், பேராசிரியர் நாசர் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.


நிகழ்ச்சி ஏற்பாடுகளை கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை தலைவர் கார்த்திகா தலைமையில்  பேராசிரியர்கள் ராமநாதன், சசிகலா, நந்தினி, கவிதா, மேகலா, ஆர்த்தி, சகாய ஆக்ஸிலின் பிரவீனா ஆகியோர் தலைமையில் மாணவர்கள் சின்னக்கருப்பசாமி, லிகாஷ், மாயன் தமிழரசன், மனோஜ், அஸ்ஃபாக், பஷீர் அகமது, முத்துப்பாண்டி, பிரகாஷ், இம்ரான் மாணவிகள் சக்தி சேர்த்தனா, சுஷ்மா, யோகலட்சுமி, மணிமேகலை, காயத்ரி, இந்துஜா, பீமா, ரூபா ஆகியோர் செய்தனர். கூட்ட அரங்கம் மற்றும் உணவு ஏற்பாடுகளை கல்லூரியின் மனித வள மானேஜர் முகமது பாசில் செய்தார். தொழில்நுட்ப உதவிகளை சிஸ்டம் இன்ஜினியர் உதய கதிரவனும் விருந்தினர் உபசரிப்பை எம்.பி.ஏ. மாணவர் மோனேஸும் செய்தனர்.


இறுதியில் பேராசிரியர் ராமநாதன் நன்றி கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !