பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் புதிய கிளை மதுரையில் திறப்பு

Madurai Minutes
0

இந்தியாவின் முன்னணி வீட்டு கடன் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் கோவில் நகரமாக திகழும் மதுரையில் தனது புதிய கிளையை திறந்துள்ளது. இந்த கிளையின் மூலம் வாடிக்கையாளர்களின் வீடு வாங்கும் கனவை நனவாக்கும் ‘ரோஷ்னி’ திட்டத்தின் மூலம் குறைந்த வட்டியில் வீட்டு கடன்களை வழங்க உள்ளது.  


நாடு முழுவதும் உள்ள இதன் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டு கடன் வசதிகளை எளிதாக பெறும் வகையில் தனது செயல்பாடுகளை பிஎன்பி ஹவுசிங் விரிவாக்கம் செய்து வருகிறது. ரோஷ்னி திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மக்களின் வீட்டு கடன் தேவையை பூர்த்தி செய்ய பிஎன்பி ஹவுசிங் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான வீட்டு கடன்களை 5 லட்ச ரூபாய் முதல் 35 லட்ச ரூபாய் வரை வீட்டு வரிவாக்கம் மற்றும் வீடு பழுதுபார்ப்பு பணி, வீட்டு மனைகள் வாங்குதல், புதிய வீடு கட்டுதல், சொத்துக்கு எதிரான கடன், புதிய சொத்துகளில் முதலீடு என குறைந்த வட்டியில் கடன் வசதிகளை பெறலாம். 40 ஆண்டு கால அனுபவத்துடன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வசதியான கடன் காலம், சிறப்பான சேவை, குறைந்தபட்ச முறையான வருமான ஆவணங்கள், அதிக கடன்-மதிப்பு விகிதம் மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் போன்ற வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.  


இது குறித்து பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான கிரிஷ் கௌஸ்கி கூறுகையில், வீடு வாங்க வேண்டும் என்பது ஒரு தனிநபரின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். மேலும் இதை அடைய, இது அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் உதவுவதே எங்களின் முக்கிய நோக்கமாகும்.  எங்களின் ரோஷ்னி திட்டத்தின் மூலம் வருங்கால வீடு வாங்குபவர்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், நாட்டில் சமூக-பொருளாதார முன்னேற்றத்தை வளர்ப்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தற்போது மதுரையில் திறக்கப்பட்டுள்ள இந்த கிளையின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு, விரிவான தனிப்பயனாக்கப்பட்ட வீட்டு கடன் சேவைகளை குறைந்த வட்டி விகிதத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வழங்க உள்ளோம். கோவில் நகரமாக திகழும் இங்கு ஏராளமான வணிக நிறுவனங்களும், தொழில் வளர்ச்சியும் நன்றாக உள்ளது. எங்களின் இந்த புதிய கிளை மூலம் இங்குள்ள வாடிக்கையாளர்களின் வீடு வாங்கும் கனவை நனவாக்கும் என்று தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !