மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உறுப்பினர் கல்வித் திட்ட முகாம்

Madurai Minutes
0

மதுரை மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை கூட்டுறவு பயிற்சி கழகம் மற்றும் மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் இணைந்து நடத்தும் உறுப்பினர் கல்வித் திட்ட முகாம் 18.10.2023 அன்று  வாடிப்பட்டி‌ வட்டாரத்தில் உள்ள மண்ணாடிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடத்தப்பட்டது. 

இதில் மதுரை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியர் திரு.ம.தீனதயாளன் அவர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்/ கள‌ அலுவலர் வாடிப்பட்டி திரு.தங்கநாககுரு அவர்கள், மதுரை சின்ன உடைப்பு கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய பேராசிரியர் முனைவர். அழகு பாண்டியன் அவர்கள், கூட்டுறவு வளர்ச்சி அலுவலர் திரு. உதயகுமார் அவர்கள் மற்றும் டான்பெட் பணியாளர்கள், சங்க செயலாளர், சங்க பணியாளர்கள் கலந்து கொண்டார்கள். 

இதில் கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு  கூட்டுறவு சங்கத்தில் இருக்கும் அனைத்து திட்டங்கள் பற்றியும், சங்க உறுப்பினர்களாக சேருவதால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் கிடைக்கும் பல்வேறு வகையான கடன்கள் பற்றியும் தெரிந்து கொண்டார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !