நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் 'hi நான்னா' திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான டீசர் வெளியீடு

Madurai Minutes
0

நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் முதன்முறையாக ஜோடி சேரும் பான்-இந்தியா திரைப்படமான 'hi நான்னா' ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஞாயிற்றுக்கிழமையை குடும்பத்துடன் கொண்டாடும் ரசிகர்களுக்கான பரிசாக இப்படத்தின் உணர்வுபூர்வமான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.


நானி மற்றும் கியாரா கண்ணா ஆகியோருக்கு இடையேயான அழகான தந்தை-மகள் கதையாக ஆரம்பிக்கும் இந்த டீசர், பின்னர் நானி மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடியின் காதல் கதையை திரையில் காட்டுகிறது. கியாரா உண்மையிலேயே நானியின் மகளா, நானியும் மிருணாளும் இதற்கு முன் சந்தித்துள்ளார்களா, வேறொருவர் உடன் தனக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் மிருணாள் ஏன் நானியிடம் தன் காதலை சொல்கிறார் போன்ற கேள்விகளுக்கான விடைகளை தெரிந்து கொள்ள நீங்கள் திரைப்படத்தை பார்க்க வேண்டும்.


பல்வேறு உணர்வுகள் நிறைந்த சவாலான கதையை தனது முதல் படத்திலேயே இயக்குநர் ஷௌர்யுவ் மிகவும் அழகாக கையாண்டுள்ளார் என்பது டீசரில் புலனாகிறது. நானி மற்றும் கியாரா கண்ணாவின் தந்தை-மகள் பந்தம் ஆகட்டும், நானி மற்றும் மிருணாள் தாக்கூர் ஜோடியின் காதல் ஆகட்டும், அனைத்தையும் மிகவும் சிறப்பாக இயக்குநர் சமன் செய்துள்ளார்.


தனது சிறப்பான நடிப்பின் மூலம் நானி நம்மை கவர்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு உணர்வுப்பூர்வமான ஒரு பாத்திரத்தில் அவரை பார்க்க முடிகிறது. சில காட்சிகளில் இளைஞர் ஆகவும் சில காட்சிகளில் நடுத்தர வயது ஆணாகவும் அவர் ஜொலிக்கிறார். தனது இருப்பின் மூலமும் நடிப்பின் மூலமும் காட்சிகளை மிளிர வைக்கிறார் மிருணாள் தாக்கூர்.


சானு ஜான் வர்கீஸ் ஐஎஸ்சி-யின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் உயிரோட்டத்துடன் திகழ்கிறது. ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசை கதைக்கும் காட்சிகளுக்கும் வலு சேர்க்கிறது. அவினாஷ் கோலாவின் தயாரிப்பு வடிவமைப்பும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் மோகன் செருக்கூரி (சிவிஎம்) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா தயாரிப்பதால் காட்சிகளின் பிரம்மாண்டம் கண்களை கவர்கிறது.


மொத்தத்தில் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துள்ள இந்த டீசர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை வெகுவாக அதிகரிக்கிறது.


முழு நீள குடும்ப படமான 'hi நான்னா', பிரவீன் அந்தோணியின் படத்தொகுப்பில் உருவாகிறது. சதீஷ் ஈ வி வி நிர்வாக தயாரிப்பாளர் ஆவார்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் பான்-இந்தியா திரைப்படமாக இந்த ஆண்டு டிசம்பர் 7 அன்று 'hi நான்னா' வெளியாகிறது.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !