அன்னை பாத்திமா கல்லூரியில் பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு கூட்டம்

Madurai Minutes
0

திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் கொண்டாட  மாணவ மாணவிகளை அறிவுறுத்தும் வகையில் தீயணைப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி தாளாளர் எம். எஸ்.ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின்  ஆலோசனையின் பேரில் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் கணினி அறிவியல் துறை சார்பில் நடைபெற்றது. 


இக்கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றிய கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பேசுகையில் தீபாவளி கொண்டாட்டங்கள் பட்டாசு வெடிப்பதிலும், பலகாரங்கள் செய்வதிலும் சம்பந்தப்பட்டுள்ளதால் நாம் அனைவரும் கண்டிப்பான முறையில் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் பட்டாசுகளை தெருக்களில் வெடிக்கச் செய்யும் பொழுது அவ்வழியே வந்து செல்லக்கூடிய பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு  நமது கொண்டாட்டங்களை வரையறுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் நமக்கும், பிறருக்கும் திண்டாட்டங்களை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.


திருமங்கலம் தீயணைப்புத் துறை சார்ந்த  அலுவலர்கள் கவியரசு மற்றும் வரதராஜன் ஆகியோர் பேசுகையில் பட்டாசுகளை வெடிக்க செய்யும் பொழுது எதிர்பாராமல் ஏற்படக்கூடிய தீ விபத்துக்களை தடுக்கும் வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் மணல் மற்றும் தண்ணீர் நிரம்பிய வாளிகளை வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் நமது உடைகளையும் பாதுகாப்பான முறையில் அணிந்து கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறினார். வீட்டில் தீபாவளி பலகாரங்கள் செய்யும் பொழுது எண்ணெய் சட்டியில் ஏற்படும் தீயை அணைக்க தண்ணீரை பயன்படுத்தக்கூடாது எனவும் அடுப்பை உடனடியாக அணைத்துவிட்டு  எண்ணெய் சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி வேண்டும் எனவும் கூறினார்.


முன்னதாக கல்லூரியின் தமிழ்த்துறை தலைவரும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலருமான முனைவர் முனியாண்டி வரவேற்புரை ஆற்றினார். கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகா முன்னிலை வகித்து உரையாற்றினார். 


இக்கூட்டத்தில் பேராசிரியர்கள் நடேச பாண்டியன், நாசர், ராமநாதன், ராஜ்குமார், சீமாட்டி, சசிகலா, நந்தினி, கவிதா, மேகலா, ஆர்த்தி சகய ஆக்ஸிலின் பிரவீனா, தனலட்சுமி,  முத்துலட்சுமி,  மணிமேகலை உள்ளிட்ட 50 பேராசிரியர்களும் 400 மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.


கூட்ட ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகா தலைமையில் பேராசிரியர்கள் ராமநாதன், சசிகலா, சகாய ஆக்சிலின் பிரவீனா, மேகலா, ஆர்த்தி, ராமுத்தாய் மற்றும் ஜோதி ஆகியோர் தலைமையில் மாணவ-மாணவியர்கள் சிந்து பைரவி பகவதி கண்ணன், ஷாருக்கான் ஆகாஷ் மணிமேகலை சுஷ்மா யோகலட்சுமி  மற்றும் கணினி இன்ஜினியர் உதய கதிரவன் ஆகியோர் செய்தனர்.


இறுதியில் கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகா நன்றி கூறினார்.


இறுதியில் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாணவர்கள் சாருக் கான், ஆகாஷ் ஆகியோர் தயாரித்த பானி பூரி மற்றும் கேக் வழங்கப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !