அன்னை பாத்திமா கல்லூரியில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு துவக்க விழா

Madurai Minutes
0

திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் எம் எஸ் ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கல்லூரியின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் மற்றும் சயின்ஸ் துறை  சார்பாக பிரம்மாண்ட கேக் தயாரிப்பு நிகழ்ச்சி துவக்க விழா துறை தலைவர் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. 


கல்லூரி முதல்வர்  டாக்டர் அப்துல் காதிர் நிகழ்ச்சியை துவக்கி வைத்து  ஆற்றிய உரையில்,  எந்த ஒரு மதம் சார்ந்த பண்டிகை கொண்டாட்டங்களாக இருந்தாலும், சமுதாயம் சார்ந்த பண்டிகை கொண்டாட்டங்களாக இருந்தாலும் அவற்றின் முக்கிய நோக்கம், மக்களை ஒன்று சேர்த்து அதன் மூலம் வேற்றுமைகளை  மறந்து ஒருவருக்கொருவர் அன்பையும், பாசத்தையும் பரிமாறிக் கொள்வது ஆகும்.  இதன் மூலம் சமுதாய ஒற்றுமை ஏற்பட்டு நாடு வளர்ச்சி அடைய உதவும் என தெரிவித்தார்.


பின்பு பேசிய ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் பால்ராஜ்  வருடந்தோறும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிற கிறிஸ்மஸ் விழாவிற்கு, ஒரு மாதத்திற்கு முன்னதாகவே  ஐரோப்பிய நாடுகளில் இது போன்ற பிரம்மாண்ட கேக் தயாரிப்பு நிகழ்ச்சி நடந்து வருவதாகவும் ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு மேலாக பண்டைய கிரேக்க மற்றும் இங்கிலாந்து  நாடுகளில் இந்நிகழ்ச்சி தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 


முன்னதாக இந்த கேக் தயாரிப்பு துவக்க விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறைப் பேராசிரியர் சீமாட்டி விக்னேஸ்வரன் வரவேற்றார். 


இந்த பிரம்மாண்ட கேக் தயாரிப்பிற்கு முந்திரிப் பருப்பு, உலர்ந்த முந்திரி பழம் டுட்டி புருட்டி பழங்கள், பேரிச்சம் பழங்கள் போன்றவை 50 கிலோ அளவிலும், 5 லிட்டர் திராட்சை ரசம் மற்றும் தேவையான இதர பொருட்களும் சேர்க்கப்பட்டு ஒரு மாத காலம் பாதுகாப்பான முறையில் நொதிப்பதற்கு அனுமதிக்கப்பட்டு பின்பு கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் கேக் தயாரிப்பதற்குரிய மாவு சேர்க்கப்பட்டு 100 கிலோ அளவில் பிரமாண்டமான கேக் தயாரிக்கப்படும்.


நிகழ்ச்சியில் கல்லூரியின் டீன் பேராசிரியர் நாசர், தமிழ் துறை தலைவர் டாக்டர் முனியாண்டி, ஆங்கில துறைத் தலைவர் ராஜ்குமார், கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத் தலைவர் கார்த்திகா,  பாரன்சிக் சயின்ஸ் துறைத் தலைவர் சீனிவாசன், பிபிஏ ஏவியேசன் துறைத் தலைவர் கார்த்திகா, ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட் துறைத் தலைவர் சுபஸ்ரீ, வணிகவியல் துறை பேராசிரியர் சகாய வாணி, தீ மற்றும் பாதுகாப்பு துறை தலைவர் சசிகலா, ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை பேராசிரியர்கள் செந்தில் குமார், அருண் குமார், செண்பகராமன், கங்காதரன் உள்ளிட்ட 50 பேராசிரியர்களும் 70 மாணவ மாணவிகளும் உற்சாகமாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பேராசிரியர் செந்தில் குமார் தலைமையில் மாணவர்கள் சித்திக், தவ்ஃபீக், ஆர்யா, ரெபின் மற்றும் முகமது அஜ்மான் ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !