விநாயகா மிஷன் லா ஸ்கூலில் தொழில்நுட்பம் வழியாக நீதிக்கான மையத்தின் முதல் பேருரை!

Madurai Minutes
0

விநாயகா மிஷன்ஸ் சென்னை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான விநாயகா மிஷன்ஸ் சட்டக்கல்லூரி தொழில்நுட்பம் வழியாக நீதிக்கான மையம் (CJT) – ன் முதல் பேருரை நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து பெருமையுடன் நடத்தியிருக்கிறது. 


இப்பேருரையை, டெல்லி உயர்நீதி மன்றம், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் மற்றும் ஒடிசா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியாகவும் திறம்பட செயலாற்றிய மாண்புமிகு நீதியரசர் டாக்டர். எஸ்.முரளிதர் வழங்கினார். “நீதிமன்ற செயல்பாடுகளை டிஜிட்டல் மையமாக்கல்: நீதிபதிகளின் அனுபவங்கள்” என்ற தலைப்பை மையமாக கொண்டிருந்த இப்பேருரை நிகழ்வு சென்னையில் அமைந்துள்ள ஹேபிலிஸ் ஹோட்டலில் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.


மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தற்போதைய நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், மாணவர்கள் மற்றும் சட்டம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைவை ஆராய்வது மீது இது ஆர்வம் கொண்டிருக்கும்  தொழில்நுட்ப ஆர்வலர்கள் உட்பட பலதரப்பட்ட  ஆளுமைகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நீதியரசர் டாக்டர். எஸ். முரளிதர் வழங்கிய அர்த்தமுள்ள சிறப்பு பேருரை, நீதிமன்றங்களின் செயல்பாடுகளை டிஜிட்டல் மையமாக்குதல் என்ற இலக்கை நோக்கிய நிலைமாற்றத்தின் மீது ஒரு விரிவான கண்ணோட்டத்தை வழங்கியது.


பிராந்திய அளவிலான நீதி-சட்டம் சார்ந்த அகாடெமிகள், நீதிமன்ற ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுதல் மற்றும் வீடியோ கான்ஃபெரன்சிங் வசதிகளை பரவலாக அமல்படுத்துதல் ஆகிய விஷயங்கள் குறித்து தனது உரையில் அவர் விரிவாக அலசினார். நீதிக்கான சட்ட அமைப்பின் செயல்திறன் மற்றும் அச்சேவையை  அணுகி பெறுவது மீது தொழில்நுட்பத்தின் தாக்கத்தை வலியுறுத்திய அவர், தனது செழுமையான அனுபவங்கள் மற்றும் கண்ணோட்டங்களை மிக தெளிவாக பகிர்ந்து கொண்டார். நீதிமன்ற நடவடிக்கைகளை டிஜிட்டல் மையமாக்கல் செயல்முறையின் முக்கிய அம்சங்களை விரிவாக ஆராய்ந்த இச்சிறப்புரை, டிஜிட்டல் யுகத்தில் நீதிக்கான அணுகுவசதி தளத்தில் நிலவும் சவால்கள் மற்றும் அடைந்திருக்கும் வெற்றிகள் பற்றிய தகவலை வழங்கியது. 


1961 ஆகஸ்ட் 8 அன்று பிறந்தவரான நீதியரசர், டாக்டர். முரளிதர், சென்னை விவேகானந்தா கல்லூரியில் வேதியியலில் இளங்கலை பட்டத்தையும் மற்றும் அதன் பிறகு மெட்ராஸ் பல்கலைக்கழகத்திலிருந்து சட்ட, பட்ட படிப்பையும் வெற்றிகரமாக நிறைவு செய்தவர். சட்டத்துறையில் புகழ்பெற்ற இவரது கல்விசார் செயல்பாடுகளும் மற்றும் வழக்குரைஞராக இவரது சாதனைகளும் மிகச் சிறப்பானவை. இவரது மிகச்சிறப்பான தகுதி அம்சங்கள் மற்றும் சட்ட நுண்ணறிவுக்காக  நன்கு அறியப்படும் இவரை நீதிமன்றத்தின் முதுநிலை வழக்குரைஞராக மாண்புமிகு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது, “சட்டம், ஏழ்மை மற்றும் சட்ட உதவி;  குற்றவியல் நீதிக்கான அணுகுவசதி” ("Law, Poverty, and Legal Aid: Access to Criminal Justice,") என்ற தலைப்பிலான இவரது புத்தகம் இச்செயல்தளத்தில் பெரிதும் பாராட்டுதலுக்குரிய பங்களிப்பாக இன்றுவரை திகழ்கிறது. 


விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான விநாயகா மிஷன்ஸ் சட்டக்கல்லூரி (VMLS) சட்ட கல்வியை பயிற்றுவிப்பதில் தன்னை அற்பணித்து கொண்டிருக்கிறது; உள்ளூர் அளவிலான, தேசிய அளவிலான மற்றும் உலகளாவிய சமூகத்தின் வளர்ந்துவரும் தேவைகளுக்கு பொருத்தமான சட்ட திறன்களை வழங்குவது இதன் குறிக்கோளாகும். VMLS – ன் வழிகாட்டல் ஆலோசகராக ஓபி ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டியும் மற்றும் ஜிண்டால் குளோபல் லா ஸ்கூல் – ம் ஆதரவளிக்கின்றன. சட்ட வல்லுநர்கள் மற்றும் கல்வி நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு வழிகாட்டல் ஆலோசனை குழுவின் வழியாக இது செயல்படுத்தப்படுகிறது.


தொழில்நுட்பம் வழியாக நீதிக்கான மையம் (CJT), சென்னை, மகாபலிபுரம் அருகே பையனூர் வளாகத்தில் செயல்படுகிறது. சிறந்த சிந்தனைகளையும் சமூக நீதி புத்தாக்கத்தையும் பேணி வளர்க்கும் மையமாக இது சேவையாற்றி வருகிறது. VMRF – ன் தொலைநோக்கு திட்டத்தையொட்டி இயங்கிவரும் இம்மையம், சட்டம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைவை ஆராய்கிறது; புதுமையான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பின் வழியாக நீதிக்கான அணுகுவசதி, அதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றை மேலும் மேம்படுத்துவதை இலக்காக கொண்டிருக்கிறது. 


சட்ட நடைமுறைகளில் உருவாக்கத்திற்கும், மேம்பாட்டிற்கும் பங்களிப்பு செய்ய மாணவர்கள், சட்ட நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு ஒத்துழைப்பு செயல்பாட்டிற்கான  ஒரு மையமாக இது செயலாற்றுகிறது. இந்த முதல் சிறப்பு பேருரை நிகழ்வின் வெற்றியை தொடர்ந்து, சட்டம் மற்றும் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டோடு தொடர்புடைய பல்வேறு முக்கிய தலைப்புகள் மீது தொடர் சிறப்புரை நிகழ்வுகளை நடத்தவிருக்கும் திட்டத்தை CJT அறிவித்தது. தொழில்நுட்பத்தின் வழியாக நீதி பரிபாலனத்தை முன்னெடுப்பது, தற்காலத்தைய சவால்களுக்கு தீர்வு காண்பது மீது சிறப்பு கவனம் செலுத்துவது மற்றும் சட்ட நடைமுறைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பது ஆகியவை மீது இம்மையம் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை ஒட்டியதாக இந்த முன்னெடுப்பு நிகழ்வுகள் இருக்கின்றன. 


நீதியரசர் டாக்டர். எஸ். முரளிதர் வழங்கிய முதல் CJT சிறப்பு பேருரை, நீதிமன்றங்களின் செயல்பாடுகளை டிஜிட்டல் மையமாக்கல் மீது பயனுள்ள விவாதங்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்து தந்திருக்கிறது; அத்துடன் சட்டம் மற்றும் தொழில்நுட்ப செயல்தளங்களுக்கிடையே ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலுவாக கோடிட்டு காட்டியிருக்கிறது. தொழில்நுட்பம் வழியாக நீதிக்கான மையம் (CJT) மூலம் சட்ட செயல்முறைகளில் உருவாக்கம் மற்றும் கற்றல், புத்தாக்கத்திற்கு உகந்த சூழலை உருவாக்குவது மீதான தனது பொறுப்புறுதிகள் விநாயகா மிஷன்ஸ் சட்டக்கல்லூரி,சென்னை பேரார்வத்துடன் தொடர்ந்து திறம்பட செயல்படுகிறது.  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !