மதுரை அட்சய பாத்திரம் உணவு வழங்கும் திட்டத்தின் 950 வது நாள்

Madurai Minutes
0

மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்டின் உணவு வழங்கும் திட்டத்தின் 950 வது நாள் விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பங்கேற்று உணவினை வழங்கினார்.


இது பற்றிய விவரம் வருமாறு. அட்சய பாத்திரம் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் என்ற அமைப்பு கொரோனா காலத்தில் தொடங்க பெற்று ரோட்டோரத்தில் உள்ள வரியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அரசு ராஜாஜி பொது மருத்துவமனையில் தலை காயம் விபத்து பகுதியில் தினந்தோறும் 300 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.      950 ஆவது நாள் இத்திட்டத்தின் 950 ஆவது நாளை முன்னிட்டு இன்று மதுரை காந்தி மியூசியம் வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 


நிகழ்ச்சிக்கு மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். மதுரை காந்தி மியூசியம் செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அதிமுக ஜெ. பேரவை மாநில பொருளாளர் வெற்றிவேல், தமிழழகன் ஆகியோர் பங்கேற்றனர். 


விழாவில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் ரோட்டோரத்தில் உள்ள வரியவர்களுக்கு இன்று பிரட் தண்ணீர் பாட்டில் மற்றும் உணவு வழங்கப்பட்டது இதனை தமிழக முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வழங்கி பேசினார் அப்போது அவர் தொடர்ச்சியாக 950 நாட்களாக மதிய உணவு வழங்கும் திட்டம் சிறப்பானது என்றும் அதை சிறப்பாக நடத்தி வரும் அதன் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொல்லி சால்வை அணிவித்து பாராட்டினார். 


நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !