மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம்களில் "மைன் டைமண்ட் ஃபெஸ்டிவல்"

Madurai Minutes
0

உலகளாவிய நகை விற்பனையாளரான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தன்னுடைய துணை பிராண்டான மைன் டைமண்டஸ்-லிருந்து வரும் மிகச்சிறந்த வைர நகைகளைக் காட்சிப்படுத்தும் விதத்தில் நடைபெறும் "மைன் டைமண்ட் ஃபெஸ்டிவல்"-ஐ திறந்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பிரச்சாரம் டிசம்பர் 8-ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை அதன் அனைத்து ஷோரூம்களில் நடைபெறும், NCR, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச நகரங்களில் ஜனவரி 5 முதல் பிப்ரவரி 11 வரை நடைபெறும். இந்த விழாவின் ஒரு அங்கமாக, வாடிக்கையாளர்கள் வைர மதிப்பில் 25% தள்ளுபடியையும். பழைய மலபார் மைன் வைர நகைகளை மாற்றும் போது 100% எக்ஸ்சேஞ்ச் மதிப்பை பெற முடியும்.


மைன் டைமண்ட் ஃபெஸ்டிவலில், சொலிடர், பார்ட்டி வேர், கேசூவல் பிக்ஸ், மற்றும் பிரைடல் சாய்சஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான வைர நகைகளை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்த வரிசையில் மனதைக் கொள்ளை கொள்ளும் நெக்பீசஸ், கண்கவர் காதணிகள், மினுமினுக்கும் ஸ்டட்கள், மற்றும் மோதிரங்கள் அடங்கும். மலபாரின் தயாரிப்புகள் அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக இருக்கும் என்பதால், நாட்டில் மிகவும் விரும்பப்படும் ஆபரண பிராண்டாக உள்ளது.


மலபார் குரூப்பின் தலைவரான திரு. M.P. அகமத் பேசும்போது, "நளினம் மற்றும் தனித்துமான தயாரிப்புகளை வழங்குவதில் தனியாத தாகம் கொண்ட மலபார் கோல்டு & டைமண்ட்ஸில் உள்ள சாலிடர் பீஸ்களை ஆழமாக நோக்குமாறு அழைக்கிறோம். துல்லியமான விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் அழகையும் மறக்க முடியாத நினைவுகளையும் நிரந்தரமாக இணைக்கும், சாலிடர் மோதிரங்கள், அவற்றின் குறைந்தபட்ச வசீகரம் மற்றும் மையத்தில் ஒற்றை வைரம், தம்பதிகளுக்கு ஆழ்ந்த அர்த்தத்தை அடையாளப் படுத்துகின்றன. எம்முடைய 'மைன் எக்ஸ்குளுசிவ்ஸ்'-ல் ஒவ்வொரு தருணத்திற்கும் போதும் அதை அணிபவர் உயர் அந்தஸ்தினைப் பெறும் விதத்தில் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள தனித்துவமான வைர நகைகள் உள்ளன. ஆர்வம் மற்றும் துல்லியத்திற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு இந்த தொகுப்பு ஒரு சான்றாக நிற்கிறது. இந்த பிரத்யேக தொகுப்பின் மூலம், வைரங்களின் இணையற்ற ஜொலிப்பினால் வாழ்க்கையின் அசாதாரண தருணங்களை ஒளிரச் செய்வதே எங்களுடைய தொலை நோக்கு பார்வை."


மலபார் கோல்டு & டைமண்ட்ஸ், சான்றளிக்கப்பட்டு மற்றும் பொறுப்புடன் பெறப்பட்ட வைரங்களைப் பயன்படுத்தி வைர நகைகளை வடிவமைப்பதில் நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் தரம் ஆகியவற்றில் உறுதியாக உள்ளது. 28 விதமான தரப் பரிசோதனைகள் மூலம், இந்த பிராண்டு மிகச் சிறந்த தரமுள்ள ஆபரணங்களை உறுதி செய்கிறது. 28 விதமான தரச் சரிபார்ப்புகளுக்குப் பின்னர், தூய்மை மற்றும் சர்வதேசத் தரத்தை உறுதிப்படுத்தும் விதத்தில் ஒவ்வொரு நகைக்கும் GIA மற்றும் IGI சான்று கொடுக்கப்படுகிறது. வாழ்நாள் பராமரிப்பு, ஒரு ஆண்டு இலவச காப்பீடு, மற்றும் பைபேக் உத்திரவாதம் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளையும் மலபார் வழங்குகிறது. ஒவ்வொரு விலைப்பட்டியிலும் அதன் மொத்த எடை, கல் எடை, மற்றும் சேதாரம் ஆகிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் வைரங்களின் மினுமினுப்பினை ஒவ்வொரும் தெரிந்து கொள்ள முடியும்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !