இந்தியர்களுக்கான புதிய "ரிலையன்ஸ் ஹெல்த் குளோபல்" மருத்துவ காப்பீட்டு திட்டம்

Madurai Minutes
0

சில நோய்கள் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் பார்த்தால்தான் குணமாகும் என்ற சூழலில் அதற்கான போதிய பண வசதி இல்லாத காரணத்தால் இந்திய நோயாளிகள் அங்கு செல்ல முடியாமல் தவித்து வருவதை கருத்தில் கொண்டு அவர்கள் அங்கு சென்று மருத்துவம் பார்த்துக் கொள்ளும் வகையில் புதிய "ரிலையன்ஸ் ஹெல்த் குளோபல்" என்னும் மருத்து காப்பீட்டு திட்டத்தை ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 


இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேருபவர்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறலாம். உலகளாவிய வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்ட தனிநபர்களுக்கு தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதிசெய்வதோடு, அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சுகாதார சேவைகள் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் மற்றும் வசதிகளையும் இந்த காப்பீடு வழங்குகிறது.


இந்த புதிய ரிலையன்ஸ் ஹெல்த் குளோபல் காப்பீடானது இணையற்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது, இது மருத்துவ காப்பீட்டில் புதியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. புற்றுநோய் மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற தீவிர நோய்கள் உட்பட, வெளிநாட்டு சிகிச்சைக்கான அதன் விரிவான பாதுகாப்புக்கு அப்பால், இந்த காப்பீடு உள்நாட்டில் செய்து கொள்ளும் சிகிச்சைக்கான உரிமைகோரலிலும் தனித்து நிற்கிறது. இந்தியாவிற்குள் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் காப்பீடுதாரர்கள் வரம்பற்ற காப்பீட்டுத் தொகையுடன், இணையற்ற பாதுகாப்பையும் மன அமைதியையும் வழங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.


இந்த காப்பீடுதாரர்கள் அவர்கள் திட்டமிட்ட மருத்துவமனையில் சேர்வதோடு, அவர்களுக்கான பயணம், தங்குமிடம் மற்றும் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான அனைத்து உதவிகளுடன் விசா மற்றும் சேவைகள், தொலைந்த பாஸ்போர்ட் அல்லது அவசரகாலப் பணம் போன்ற அவசரநிலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த காப்பீடு வடிவைமக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காப்பீட்டை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்துவது 1 மில்லியன் அமெரிக்க டாலர் வரையிலான மிகப்பெரிய காப்பீட்டு கவரேஜ் ஆகும், இது வெளிநாட்டில் சிகிச்சை பெறும்போது பாதுகாப்பு உணர்வை உறுதி செய்கிறது.


ரிலையன்ஸ் குளோபல் ஹெல்த் காப்பீடு, காப்பீடுதாரர்களின் சுகாதாரப் பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் உறுதியான பங்களிப்பை வழங்குவதோடு, மருத்துவமனையில் சேர்வதற்கு முன் மற்றும் பின், மற்றொரு மருத்துவரிடம் நோய் சம்பந்தமான இரண்டாவது ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் வழங்குகிறது. காப்பீடுதாரரின் அறை வாடகைக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் ஏர் ஆம்புலன்ஸ் முதல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கான செலவுகள் வரை அனைத்தையும் உள்ளடக்கி இந்த பாலிசி உள்ளது. ரிலையன்ஸ் ஹெல்த் குளோபல் காப்பீடுதாரர்களுக்கு மன அமைதியை உறுதி செய்வதோடு, இந்த காப்பீடுதாரர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் நல்வாழ்வில் அதிக கவனம் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இது குறித்து ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகேஷ் ஜெயின் கூறுகையில், 'ரிலையன்ஸ் ஹெல்த் குளோபல்' என்பது எல்லைகளைக் கடந்த ஒரு புரட்சிகரமான மருத்துவ காப்பீட்டுத் திட்டமாகும். உலகமயமாகி வரும் இந்த சூழலில், ஏராளமான இந்தியர்கள் வேலைக்காகவோ அல்லது ஓய்வுக்காகவோ வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து கொண்டே இருப்பதால், இந்தியாவிற்கும் வெளிநாடுகளுக்கும் தனித்தனியாக மருத்துவ காப்பீடுகளை வாங்குவது என்பது அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அவற்றை போக்கும் விதமாக உள்நாட்டில் வரம்பற்ற காப்பீட்டுத் தொகை மற்றும் உலகளவில் 1 மில்லியன் டாலர் வரையிலான காப்பீட்டுத் தொகை என்ற அதன் தனித்துவமான அம்சத்துடன், சுகாதார காப்பீட்டில் புதிய தரநிலைகளை ஏற்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் இந்த புதிய காப்பீட்டை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம். எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த மன அமைதியை உறுதிசெய்து, உலகளாவிய சுகாதாரச் சிகிச்சைக்கான அசைக்க முடியாத ஆதரவையும் அணுகலையும் வழங்குவதே எங்களின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !