சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம்

Madurai Minutes
0

“சாலைப் போக்குவரத்து விபத்துகள் (RTA) இந்தியாவில் மிகப்பெரிய பொது சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்திருக்கின்றன.  ஒவ்வொரு மணி நேரத்திலும் 53 விபத்துகள் நிகழ்கின்றன.  19 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.  இதன் காரணமாக, இந்தியாவில் உயிரிழப்பிற்கான முதன்மை காரணங்களுள் 6வது இடத்தையும், திறனிழப்பை ஏற்படுத்தும் முன்னணி காரணங்களில் 3வது இடத்தையும் சாலைப்போக்குவரத்து விபத்துகள் கொண்டிருக்கின்றன.  கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சாலை விபத்துகளின் காரணமாக ஏற்படும் உயிரிழப்பு ஏறக்குறைய 9.4% அதிகரித்திருக்கிறது. இவ்விபத்துகள் ஏற்படுத்தும் பெரும் சுமையைக் குறைப்பதற்கு சாலைப் பாதுகாப்பு விதிகளின் கண்டிப்பான அமலாக்கம், மிக நவீன அவசரநிலை சிகிச்சை சேவைகளின் வலுவான அமைப்பை உருவாக்குதல்  மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க பல துறைகளின் ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்றுவது ஆகியவை மிக முக்கியமானவை” என்று மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் (MMHRC) விபத்து சிகிச்சை நிபுணர்கள் கூறினர்.  


விபத்து மற்றும் அவசர சிகிச்சை துறையின் தலைவர் மற்றும் முதுநிலை சிறப்பு நிபுணர் டாக்டர். நரேந்திர நாத் ஜனா, விபத்துக்கான சிகிச்சையில் நிகழ்ந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து ஊடகவியலாளரிடம் பேசுகையில், “கடந்த சில ஆண்டுகளாக நாடெங்கிலும் விபத்தினால் காயமடையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  விபத்தில் பாதிக்கப்படுபவர்களில் சுமார் 80% நபர்களுக்கு ‘கோல்டன் அவர்’ என அழைக்கப்படும் காலஅளவிற்குள் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கான அணுகுவசதியில்லை; மருத்துவமனையை அவர்கள் சென்றடைவதற்கு முன்னதாகவே அவசரநிலை சிகிச்சை தேவைப்படும் 30% நோயாளிகள் இறந்து விடுகின்றனர்.  சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு  ‘கோல்டன் அவர்’ சிகிச்சை திறம்பட கிடைப்பதை உறுதிசெய்ய, தேவையான மருத்துவ சாதனங்கள் கொண்ட, மேம்பட்ட உயிர்காப்பு சிகிச்சை வழங்கும் அவசரநிலை சிகிச்சை ஊர்திகளின் அமைப்பை உறுதிசெய்வது மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்; அத்துடன், சுவாசப்பாதை மேலாண்மை, இரத்தக்கசிவை கட்டுப்படுத்துவது, எலும்பு முறிவை சரிசெய்வது மற்றும் இரத்தஅழுத்தம், இதயத்துடிப்பு போன்ற அத்தியாவசிய அறிகுறிகள்  உரிய அளவில் இருக்குமாறு செய்வது ஆகிய செயல்பாடுகளில் பிரத்யேகமாக பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதும் மிக முக்கியமானது.” என்று கூறினார்.


மூளை – நரம்பியல் அறுவைசிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். செல்வ முத்து குமரன் கூறியதாவது: “விபத்துகளினால் மூளையில் காயமடைந்த நோயாளிகளது மேலாண்மைக்கு மூளை – நரம்பியல் சார்ந்த உயிர்காப்பு சிகிச்சைக்கான தீவிர சிகிச்சைப் பிரிவுகள் கட்டாயம் அவசியம்.  அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பை முறையாக வழங்குவதற்கும் இந்த ஐசியு – க்கள் தேவைப்படுகின்றன.  மூளைக்கு உட்புறத்திலுள்ள அழுத்தத்தை கண்காணிப்பதற்கு தேவையான சாதனங்களும், வசதிகளும் இந்த சிறப்பு ஐசியுக்களில் இருக்கும்.  மூளைக்கு உட்புறத்தில் என்ன நிகழ்கிறது என்பது குறித்து துல்லியமான தகவலை இந்நவீன சாதனங்கள் வழங்குகின்றன மற்றும் மூளைக்குள் ஏற்படும் திரவத் தேக்கத்திற்கான சிகிச்சையை வழங்குவதில் உதவுகின்றன.  இதன் வழியாக மூளைக்குள் அழுத்தத்தை குறைப்பதற்கான அறுவைசிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.  11 – படுக்கை வசதிகள் கொண்ட மூளை -நரம்பியல் சார்ந்த உயிர்காப்பு சிகிச்சைக்கான ஐசியு,  MMHRC – ல் சிறப்பாக இயங்கி வருகிறது. சிறப்பு பயிற்சியளிக்கப்பட்ட செவிலியர்களின் குழு இதில் பணியாற்றுகின்றனர்.”


எலும்பியல் சிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். சத்திய நாராயணா பேசுகையில், “எலும்பு முறிவுகள்,, எலும்புநாண் கிழிசல்கள், தசைநாண் கிழிசல்கள் மற்றும் மூட்டுப்பிறழ்வுகள் ஆகியவை உட்பட, எலும்பியல் சார்ந்த காயங்கள்  சாலைப்போக்குவரத்து விபத்துகளில் மிகப்பொதுவாக ஏற்படுகின்றன.  இந்த வகைகளிலான காயங்கள், எப்போதும் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதில்லை என்றாலும் கூட, தினசரி வாழ்க்கையின் தரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்துபவையாக அவைகள் இருக்கக்கூடும். ஆகவே, எந்தவொரு காயத்திற்கும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை கவனிப்பை பெறுவது இன்றியமையாதது.  


அவர் மேலும் பேசுகையில், தசைக்கூட்டு காயங்களை மதிப்பீடு செய்வதிலும், அவசியமான எலும்பு முறிவை சரிசெய்தல் மற்றும் மூட்டு பிறழ்வு வாய்ப்பை குறைப்பது ஆகிய செயல்பாடுகளுக்கு MMHRC  - ல் எலும்பியல் சிகிச்சை துறை மருத்துவர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.  இரத்தஇயக்க ரீதியாக கடும் பாதிப்புள்ள நோயாளிகளில் எலும்பு முறிவுகளை கண்டறிய படுக்கை அருகேயே எடுத்துச் செல்லக்கூடிய நடமாடும் எக்ஸ் – ரே இயந்திரமும் இம்மருத்துவமனையில் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.


குடல் இரைப்பை அறுவைசிகிச்சை  துறையின் முதுநிலை  நிபுணர் டாக்டர். மோகன் பேசுகையில், “சாலைப் போக்குவரத்து விபத்துகளில் மிகவும் அதிகமாக காயம் ஏற்படும் உடல் பகுதியாக வயிறு இருக்கிறது.  மேலும், 25 சதவிகித நோயாளிகளுக்கு உடனடியாக வயிற்றுப் பகுதியை ஆராய்வதற்கான அவசியம் காணப்படுகிறது.  வயிற்று காயங்கள் பெரும்பாலும் ஊடுருவுகின்ற காயங்களாக அல்லது கூறற்ற, அழுத்த காயங்களாக இருக்கின்றன.  விபத்து தொடர்புடைய உயிரிழப்புகளில் 7-10 சதவிகிதம் இத்தகைய காயங்களினால் ஏற்படுகின்றன.  பெரும்பாலும் அதிகம் காயத்திற்கு ஆளாகின்ற வயிற்றுப்பகுதி உறுப்புகளுள் கல்லீரல், அதைத்தொடர்ந்து மண்ணீரல், சிறுநீரகங்கள், சிறிய மற்றும் பெரிய குடல்களின் உள்ளுறுப்புகள் உள்ளடங்கும்.  இத்தகைய நோயாளிகளுக்கு உடனடியாக லேப்ரோடோமி, தோரகோடமி  (ஆகியவை தேவைப்படும்,” என்று கூறினார்.


MMHRC – ன் மருத்துவ நிர்வாகி  டாக்டர். B. கண்ணன் பேசுகையில், “விபத்தில் காயமடைந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது, விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து தொடங்கி அவசரநிலை சிகிச்சை அறை வரை தொடர்கிறது.  காயமடைந்த நோயாளிகளை சரியாக மதிப்பாய்வு செய்வதும் மற்றும் உடனடியாகவே அவசியமான பரிசோதனைகளை மேற்கொள்வதும் முக்கியம்.  நோயாளிகளின் உடல்நிலையை சீராக்கிய பிறகு அவசியமான அறுவைசிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.  பயனளிக்கின்ற, திறமையான மருத்துவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த குழுப்பணி இருக்குமானால், விபத்தில் காயமடைந்த நோயாளிகளின் உயிர்களை அது காப்பாற்றும் மற்றும் ஊனங்கள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கும்.  MMHRC – ல், எமது நோயாளிகள் அனைவரும் எல்லா நேரங்களிலும் மிகச் சிறப்பான உகந்த சிகிச்சை பராமரிப்பை பெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்.” என்று குறிப்பிட்டார்.  


ஒவ்வொரு மாதமும் விபத்துகளில் காயமடைந்த ஏறக்குறைய 200 நோயாளிகள் MMHRC – க்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.  விபத்து காயங்களுக்கான சிகிச்சை குழுவில், அவசரநிலை சிகிச்சை மருத்துவர்கள், நரம்பியல் அறுவைசிகிச்சை வல்லுனர்கள், பொது அறுவைசிகிச்சை மருத்துவர்கள், எலும்பியல் சிகிச்சை நிபுணர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  கடுமையாக காயமடைந்த சாலை விபத்து நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒருங்கிணைந்த ஒரு குழுவாக இம்மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர்.  இந்நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், உயிர்காப்புக்கான மேம்பட்ட சிகிச்சையை வழங்குவதில் பிரத்யேக பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  உயிர் காப்புக்கான மருந்துகள், சாதனங்கள், சோனோகிராஃபி போன்ற அனைத்து வசதிகளையும் மற்றும் இரத்தவங்கியையும் கொண்டதாக இம்மருத்துவமனையின் அவசரநிலை சிகிச்சை அறை செயல்படுகிறது.  இம்மருத்துவமனையின் சிகிச்சைக்குப் பிந்தைய மறுவாழ்வு குழுவில் இயன்முறை சிகிச்சை வல்லுனர்கள், பணி / தொழில் சார்ந்த சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பேச்சு சிகிச்சை வல்லுனர்கள், உணவுமுறை மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  


இத்தகைய சூழலில், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்திலுள்ள கருத்தரங்கு கூடத்தில் 2023 டிசம்பர் 12-ம் தேதியன்று தேசிய அளவிலான மேம்பட்ட விபத்து சிகிச்சை கருத்தரங்கு நிகழ்வை MMHRC ஏற்பாடு செய்து நடத்துகிறது.  இக்கருத்தரங்கு நிகழ்வை பிற பிரபல ஆளுமைகள் மற்றும் விருந்தினர்கள் முன்னிலையில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் M.S. சங்கீதா ஐஏஎஸ் தொடங்கி வைக்கிறார் மற்றும் மதுரை, அரசு ராஜாஜி மருத்துவமனையின் டீன் பேராசிரியர் டாக்டர். A. ரத்தினவேல் முதன்மை விருந்தினராக பங்கேற்கிறார்.  

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !