மத்திய அரசின் இளைஞர் நலன் துறை சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு முகாம்

Madurai Minutes
0

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் மூலம் நாட்டிலுள்ள நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் தேசிய ஒருமைப்பாடு முகாம் மதுரை மாவட்டம் திருமங்கலம், ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கல்லூரியில் இன்று முதல்  ஏழு நாட்களுக்கு நடைபெற உள்ளது.


இம்முகாமில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், புதுச்சேரி, புதுடெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவியர்கள் 300-க்கும் மேற்பட்டோரும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் 50-க்கும் மேற்பட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர்.


இன்று (திங்கட்கிழமை) முதல் நடைபெற உள்ள இந்த முகாமிற்கு தெலுங்கானா, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து  நேற்றே (ஞாயிற்றுக்கிழமை) அன்னை பாத்திமா கல்லூரிக்கு வந்துள்ளனர். 


ஏழு நாட்கள் நடைபெற உள்ள முகாமில் தேச ஒற்றுமை, தேச முன்னேற்றம், கலாச்சார பரிமாற்றம் போன்றவற்றை வலியுறுத்தும் விதமாக தினசரி விழிப்புணர்வு பேச்சும், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள மாணவ மாணவியர்கள் பங்கேற்கும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. 


இன்று மாலை 3 மணி அளவில் நடைபெற உள்ள இம்முகாமின் துவக்க விழாவில் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் குமார், நபார்டு வங்கியின் சிறப்பு இயக்குனர் பேராசிரியர் ராம. சீனிவாசன், அன்னை பாத்திமா கல்லூரி தாளாளர் எம் எஸ் ஷா, பொருளாளர் சகிலா ஷா, பேராசிரியர் நவராஜ், நாட்டு நலப்பணித்திட்ட மண்டல இயக்குனர் சாய்ராம், மாநில அலுவலர் பேராசிரியர் செந்தில்குமார், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாண்டி, கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.


முகாம் ஏற்பாடுகளை மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் பாண்டி, அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நல பணி திட்ட அலுவலர் பேராசிரியர் முனியாண்டி, முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் பால்ராஜ், கணினித் துறை தலைவர் கார்த்திகா, பாரன்சி சயின்ஸ் துறை தலைவர் சீனிவாசன், ஏவியேசன் துறை தலைவர் கார்த்திகா மற்றும் பேராசிரியர்கள் தங்கப்பாண்டி திலீபன் ராமுத்தாய், மணிமேகலை, விக்னேஸ்வர சீமாட்டி, உடற்கல்வி இயக்குனர்கள் செந்தில்குமார் நாராயணபிரபு, சிஸ்டம் இன்ஜினியர் உதயகதிரவன் உள்ளிட்டோர் செய்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !