அன்னை பாத்திமா கல்லூரியில் 'ஸ்மார்ட் செஃப்' போட்டி

Madurai Minutes
0

திருமங்கலம் ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கல்லூரியின் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையும், காளீஸ்வரி ரீபைனரிஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய 'ஸ்மார்ட் செஃப்' சமையல் போட்டியில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் மறைன் ஹாஸ்பிட்டாலிடி துறையைச் மாணவர்கள் 110க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.


இரண்டு மணி நேரம் நடந்த இப்போட்டியில் ஹைதராபாத் பிரியாணி, தம் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, புலவு, சிக்கன் டிக்கா, சிக்கன் ஃபிங்கர்ஸ் போன்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பரிமாறப்படும் 120க்கும் மேற்பட்ட உணவு வகைகளை தயார் செய்து காட்சிப்படுத்தினர். காளீஸ்வரி பைனரிஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜர் மகேஸ்வரி, ஈவன்ட் மேனேஜர் சித்ரா ரத்தினவேலு ஆகியோர் மாணவ மாணவியர்கள் தயார் செய்திருந்த உணவு வகைகளை ருசி பார்த்தும், உணவு வகைகள் அலங்கரிக்கப்பட்ட விதத்தை பொருத்தும் பரிசுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுத்தனர். 

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் கலந்து கொண்டு இது போன்ற போட்டிகளில் நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்று  சமையல் மற்றும் உணவு வகை அலங்காரங்கள் போன்றவற்றில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி புதிய புதிய உணவுகளை தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை கூறினார்.  சென்னையில் இருந்து சமையல் கலை நிபுணர் தாமு நேரலையில் கலந்து கொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடினார். விஜய் டிவி புகழ் மிமிக்கிரி கலைஞர் விஜய் பல குரல்களில் மிமிக்கிரி செய்து மாணவர்களை உற்சாகப்படுத்தினார். 

சிறந்த ருசியான உணவுகளை தயார் செய்த மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசான ரூபாய் 5000, மறைன்  ஹாஸ்பிட்டாலிடி மாணவர் டிக்ட்ரோ ரோயி ராஜ் என்பவருக்கும், இரண்டாம் பரிசு ரூபாய் 3000 ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையைச் சேர்ந்த  செல்ஷியா என்ற மாணவிக்கும், மூன்றாம் பரிசு ரூபாய் 2000  சச்சிதானந்தன் என்ற மாணவருக்கும்  வழங்கப்பட்டது.


போட்டி ஏற்பாடுகளை ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை தலைவர் பால்ராஜ் தலைமையில் துறை  பேராசிரியர்கள் விக்னேஸ்வர சீமாட்டி, செந்தில், அருண், கங்காதரன், செண்பகராஜ் ஆகியோர் செய்தனர்.



Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !