மதுரை ஆகாஷ் பைஜூஸ் மாணவர்கள் ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் சாதனை

Madurai Minutes
0

ஆகாஷ் பைஜூஸ், 2024 ஆம் ஆண்டுக்கான கூட்டு நுழைவுத் தேர்வின் (ஜேஇஇ) முதல் அமர்வில் 98 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்ற மதுரையைச் சேர்ந்த பத்து மாணவர்களின் குறிப்பிடத்தக்க சாதனையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.  


கார்த்திக் அகர்வால் வேதியியலில் 100 சதவிகிதத்துடன் 99.91 சதவிதமும், நிதிஷ் மணி 99.08 சதவிதம் மற்றும் சஞ்சய் ராம் 99.01 சதவிதம் பெற்றுள்ளனர்.  தேசிய தேர்வு முகமை இன்று, இந்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள இரண்டு பொறியியல் கூட்டு நுழைவுத் தேர்வுகளில் முதல் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. 


உலகளவில் மிகவும் சவாலான நுழைவுத் தேர்வான புகழ்பெற்ற ஐஐடி ஜேஇஇ-யில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஆகாஷின் வகுப்பறைத் திட்டத்தில் பதிவுசெய்த மாணவர்கள், அடிப்படைக் கருத்துகளைப் புரிந்துகொண்டு சரியான படிப்பு முறையை அர்ப்பணிப்புடன் பின்பற்றி சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். ஜேஇஇ மெயின்ஸ் இந்தியா முழுவதும் உள்ள பல தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற மத்திய உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் பயில நுழைவுத் தேர்வாக செயல்படுகிறது. ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்விற்கு முன்பு ஜேஇஇ மெயின்-ல் பங்கேற்பது கட்டாயமாகும்.


ஆகாஷ் பைஜூஸ்-க்கு நன்றி தெரிவித்த மாணவர்கள், “ஆகாஷின் விரிவான உள்ளடக்கம் மற்றும் பயிற்சி இல்லாமல், குறுகிய காலத்திற்குள் பல பாடங்களின் கருத்துகளை மிகத் தெளிவாக புரிந்து படிப்பது சாத்தியமில்லை. இதற்காக இரண்டு வகைகளிலும் எங்களுக்கு உதவிய ஆகாஷுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்றனர்.


மாணவர்களை வாழ்த்தி பேசிய ஆகாஷ் பைஜூஸ் மண்டல இயக்குநர் தீரஜ் மிஸ்ரா, “மாணவர்களின் சிறப்பான செயல்பாடானது, ஆகாஷ் பைஜூவின் விரிவான பயிற்சி மற்றும் புதுமையான கற்றல் தீர்வுகளுடன் மாணவர்களை மேம்படுத்துவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இதன் மூலம் அவர்கள் போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்குகின்றனர்.  மாணவர்களின் அடுத்த முயற்சிக்கும், அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கும் நல்வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !