இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் மதுரை சிறைவாசிகளுக்கு விளையாட்டு பயிற்சி

Madurai Minutes
0

நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைகளில் உள்ள சிறைவாசிகளுக்கு  விளையாட்டு பயிற்சிகள் அளிக்கும் வகையில் பரிவர்த்தன் என்ற விளையாட்டுப் பயிற்சி திட்டத்தினை இந்தியன் ஆயில் தலைவர் திரு. ஸ்ரீகாந்த் மாதவ் வைத்தியா கடந்த 2021 ஆகஸ்ட் 15 அன்று மும்பையில் துவக்கி வைத்தார்.


இந்த பரிவர்த்தன் திட்டத்தின் கீழ் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அந்தந்த மாநில சிறைத் துறையுடன் இணைந்து சிறை கைதிகளின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தும் வகையில் பூப்பந்து, கைப்பந்து, செஸ், டென்னிஸ் ,கேரம் ஆகியவற்றில்  தலைசிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.


நான்கு வார கால பயிற்சியின் போது சிறைவாசிகளுக்கு விளையாட்டின் அடிப்படைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும் அதற்கு தேவையான விளையாட்டு பொருட்கள் மற்றும் கருவிகளை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமே வழங்கி விடும் சிறப்பாக பயிற்சி முடித்த பின் விளையாட்டு போட்டிகளிலும் இவர்கள் பங்கு பெறுவதற்கான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.


பரிவர்த்தன் நிகழ்ச்சியின் ஏழாவது கட்டமாக தமிழகத்தில் மதுரை மத்திய சிறையில் இன்று திட்டம் துவங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில்  மதுரை சரக சிறைத்துறை டிஐஜி திரு. பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார், இந்தியன் ஆயில்  கார்ப்பரேஷன் தமிழக பிரிவு தலைவர் திரு. அண்ணாதுரை மற்றும் மதுரை மண்டல மேலாளர் திரு. மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் நேரலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் திரு. ஸ்ரீகாந்த் மாதவ் வைத்தியா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !