தேர்தல் கமிஷனுக்கு மதுரையர் இயக்கத்தின் சார்பாக வேண்டுகோள்

Madurai Minutes
0

வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்வதை நிறுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் நினைப்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இதில் 100% பொதுமக்கள் மற்றும் சிறு குறு தொழில் புரிவோர் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள்.


தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வருபவர்கள் இரண்டு பேர் வந்தாலும்,சிறு வியாபாரிகள் தனது பொருட்களை கொள்முதல் செய்வதற்காகவும்,விவசாயிகள் அன்றாட தேவைக்கு தேவைப்படும் உரங்கள் & விதைகள் வாங்குவதற்கும்,காய்கறிகளை விற்பனை செய்து அதை பணத்தை கொண்டு செல்வதற்கும் குறைந்தபட்சம் ஒரு லட்ச ரூபாய் எடுத்து செல்ல வேண்டியது இருக்கிறது. இவ்வளவு பணம் கொண்டு வந்தால் எதற்காக ஏன் என்று தேர்தல் கமிஷன் கேட்கிறது.விவசாயிகள்யிடம் எந்த ஆவணத்தை எதிர்பார்க்கிறீர்கள்? சுற்றுலா வரும் பயணிகளுக்கு எந்த ஆவணத்தை எதிர்பார்க்கிறார்கள்? இதுவரை இந்த சட்டம் வந்ததிலிருந்து இதுவரைக்கும் அரசியல்வாதி பணம் கையாளப்படுத்தவில்லை? கைப்பற்றிய பணம் அனைத்தும் பொதுமக்கள் பணம், கல்யாணத்துக்கு தேவைப்படுகின்ற சீர்வரிசை பொருட்கள் வாங்குவதற்கு கொண்டு வந்த பணம், வியாபாரிகள் கொள்முதல் செய்வதற்கு கொண்டு வந்த பணம்,சுற்றுலா வருபவர்களிடமிருந்து பெறப்பட்ட பணம் மட்டுமே இதுவரைக்கும் தேர்தல் கமிஷன் கையாளப்படுத்தி இருக்கிறது.


தேர்தலுக்கு தேர்தல் இது போன்ற நடைபெறுகின்ற செயல்பாட்டால் மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதனை மதுரையர் இயக்கத்தின் சார்பாக தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். தற்போது இதற்கு உடனடியாக மத்திய தேர்தல் ஆணையம் முடிவு கட்ட வேண்டும் முடியாத பட்சத்தில் வரும் தேர்தலிலேயாவது இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மதுரையர் இயக்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !