அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம்

Madurai Minutes
0

திருமங்கலம் வட்டம் மைக்குடி கிராமத்தில் அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்கும் ஏழு நாள் சிறப்பு முகாம் மார்ச் 25ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. 


முகாமின் மூன்றாம் நாள் நிகழ்வாக இக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், சுற்றுப்புறத்திலும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் மற்றும் திருமங்கலம் சுப்ரீம் அரிமா சங்கத்தினரும் இணைந்து 100 மரக்கன்றுகள் நடவு செய்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் மாணவர்களிடையே மரம் நடுவதின் அவசியம் பற்றியும், மரங்களின் எண்ணிக்கை குறைவதினால் ஏற்படும் சுற்றுச்சூழல் தீமைகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மாணவ- மாணவியர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் ஏற்கனவே உள்ள மரங்களை பாதுகாப்பதிலும், புதிய மரக்கன்றுகள் நடவு செய்தும் சுற்றுச்சூழல்  நண்பர்களாக திகழ வேண்டும் எனவும், வருங்கால தலைமுறையினருக்கு மாசற்ற சுற்றுச்சூழலை அளிக்க வேண்டிய பொறுப்பு தற்கால தலைமுறையினருக்கு உள்ளது என்பதை உணர்ந்து தங்களது வாழ்வியல் முறையை அமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். 


இந்நிகழ்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்  முனைவர் பாண்டி, மதுரை செந்தமிழ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் பூங்கோதை, மைக்குடி ஊராட்சி மன்ற தலைவி சீனி மாரியம்மாள், தலைமை ஆசிரியை லதா தேவி, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியை தாமரைச்செல்வி, ஆசிரியை சுபா மற்றும் திருமங்கலம் சுப்ரீம் அரிமா சங்கத்தைச் சேர்ந்த  செந்தில் குமார்,  சின்னச்சாமி, அழகர்சாமி, வேலுச்சாமி, சந்தானம், ராஜ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். 


முகாம் ஏற்பாடுகளை அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு பணத்திட்ட நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் முனியாண்டி தலைமையில் பேராசிரியர்கள் சமீம்பானு, ராமுத்தாய், இன்பமேரி, மயில், அங்காள ஈஸ்வரி, ராஜ்குமார் ஆகியோரும்  பகவதி, கண்ணன் உமா மகேஸ்வரன், அருந்ததி, சிந்துபைரவி, முத்துக்கிருஷ்ணன், உமாதேவி, அமிர்தா, ஆனந்த், தாரணி முத்துக்குமார், சஞ்சய் கான், மணிகண்டன், பழனிச்சாமி, ரம்யா, நவீன், பாஸ்கர், மனோஜ் உள்ளிட்ட மாணவ-மாணவியர்களும் செய்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !