நாட்டின் ஆரோக்கியம் என்ற தலைப்பில் 4வது பதிப்பை அப்போலோ வெளியிட்டது

Madurai Minutes
0

உலக சுகாதார தினத்தன்று  நாட்டின் ஆரோக்கியம்  (Health of Nation) அறிக்கையின் 4வது பதிப்பை வெளியிட்டது. இந்த அறிக்கையானது இந்தியாவில் தொற்றா நோய்களின் தாக்கம் கணிசமான அளவுக்கு அதிகரித்து வருவதையும், குறிப்பாக புற்றுநோயின் தலைநகரமாக இந்தியா மாறும் வகையில் நோய் பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்களின் எண்ணிக்கை எச்சரிக்கை தரக்கூடிய வகையில் அதிகரித்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது.


அதிர்ச்சியூட்டும் வகையில், இந்தியர்களில் 3ல் 1 பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையிலும், 3ல் 2 பேர் உயர் ரத்த அழுத்தத்திற்கு முந்தைய நிலையிலும், 10ல் ஒருவர் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டவராகவும் உள்ளனர். ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் பிரச்னைகளின் தாக்கத்தை உடல் பரிசோதனைகள் குறைப்பதால், சீரான இடைவெளியில் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.


அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை  சிஓஓ நீலகண்ணன் கூறுகையில்,''நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் ஆரோக்கியம் தவிர்க்க முடியாத அம்சம் என்பதால் புற்றுநோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற தொற்றா  நோய்களின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்'' என்றார்.


அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் பிரவீண் ராஜன் கூறுகையில்,'' உலக அளவில் தொற்றா நோய் பாதிப்பு அச்சம் தரும் வகையில் அதிகரிக்கும் நிலையில், தடுப்பு மருத்துவத்தில் புத்தாக்க நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதும், சுகாதார வசதி வாய்ப்புகளையும் அதிகப்படுத்த வேண்டியது அவசியம்.   அவசியம். 21ம் நூற்றாண்டில் ஒட்டுமொத்த சமுதாயம் வளமாகவும், நலமாகவும் இருப்பதற்கு மக்கள் உடல் நலமுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.


அப்போலோ மருத்துவமனைக்கு பரிசோதனை, சிகிச்சைக்கு வருவோர் மற்றும் பொதுவான மருத்துவச் சூழல் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை  நோய் தடுப்பு மற்றும் தனிநபர் சார்ந்த சிகிச்சை  அணுகுமுறைகள் தொடர்பான  ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  மேலும் மருத்துவ சிகிச்சையின் பலன்களை மேம்படுத்துவது மற்றும் தனிநபர் சார்ந்த சிகிச்சையை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகளையும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது என்று அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை  சிஓஓ நீலகண்ணன் தெரிவித்தார். மதுரை மண்டல உயர் செயல் அதிகாரி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பிரவீன் ராஜன், மற்றும் மார்க்கெட்டிங் மண்டல பொது மேலாளர் மணிகண்டன், பொது மேலாளர் கற்பகவல்லி ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !