MMHRC தென் தமிழகத்தில் முதல் முறையாக LAMPOON உதவியுடன் கூடிய TMVR சிகிச்சையை நிகழ்த்தியது

Madurai Minutes
0

சென்னை அல்லாத தமிழ்நாட்டில் இதயவியலில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையாக LAMPOON உதவியுடன் கூடிய TMVR செயல்முறையை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் வெற்றிகரமாக செய்திருக்கிறது.  


கதீட்டர் அடிப்படையிலான இந்த மேம்பட்ட உத்தி, முன்பே இம்பிளான்ட் செய்யப்பட்ட மிட்ரல் வால்வை விரிவாக்கவும் அல்லது கீறி எடுக்கவும், புதிய வால்வை அதற்கு மாற்றாகப் பொருத்தவும் உதவுகிறது.  முன்னாள் வங்கி அதிகாரியான 75 வயதான நபருக்கு இந்த அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.  மிட்ரல் வால்வு மாற்றுவதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு திறந்தநிலை இருதய அறுவை சிகிச்சை இவருக்கு செய்யப்பட்டிருந்தது.  


மிட்ரல் வால்வு என்பது, இதயத்திலுள்ள நான்கு வால்வுகளில் ஒன்றாகும்.  இடது இதய மேலறையிலிருந்து, இதயத்தின் பிரதான பம்ப்பிங் அறையான இதய கீழறைக்கு இரத்தஓட்டத்தை இது ஏதுவாக்குகிறது.  மிட்ரல் வால்வு, இரு leaflet-களை கொண்டிருக்கிறது.  இதயத்தின் வழியாக ஒரு திசையில் இரத்தம் பாய்வதை உறுதி செய்வதற்கு தமனியை திறப்பதும் இறுக்கமாக மூடுவதும் தான் இந்த மிட்ரல் leaflet- களின் ஒரே நோக்கமாகும்.  சரியாக செயல்படாத மிட்ரல் வால்வு இருக்குமானால், அது நுரையீரலில் மிகை அழுத்தத்திற்கும், இதய விரிவாக்கத்திற்கும், ஏட்ரியல் fibrillation-ற்கும், இரத்த உறைகட்டிகளுக்கும்,இதய செயலிழப்பிற்கும் வழிவகுக்கக்கூடும்.


மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இதயவியல் துறையின் தலைவர் டாக்டர். கணேசன், இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். சிவக்குமார் மற்றும் இதய மயக்க மருந்தியல் துறையின் தலைவர் டாக்டர். குமார் ஆகியோர் தலைமையிலான சிகிச்சைக்குழு அதிக துல்லியத்தோடும், திறனோடும் இந்த சிக்கலான சிகிச்சை செயல்முறையை வெற்றிகரமாக செய்திருக்கிறது.  இந்தியாவில் டிரான்ஸ்கதீட்டர் எலக்ட்ரோகார்டியாலஜி துறையில் முதன்மை நிபுணர் என அறியப்படும் டாக்டர். ரவீந்தர் சிங் ராவ், இந்த செயல்முறையை மேற்பார்வையிட்டு, நிபுணத்துவ சிகிச்சை செயல்படுத்தப்படுவதை உறுதி செய்தார்.  இதற்குப் பிறகு சில நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த இந்த நோயாளி, மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.  மருத்துவ செயல்முறையுடன் தொடர்புடைய எந்த பிரச்சனைகளும் அவருக்கு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  


மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைவர் டாக்டர். S. குருசங்கர் இந்நிகழ்வு குறித்து கூறியதாவது: “இச்சிறப்பான சாதனையை நிகழ்த்தியதற்காக எனது மனமார்ந்த பாராட்டுகளை மருத்துவர்கள் குழுவிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.  மேம்பட்ட சிகிச்சை பராமரிப்பை வழங்குவதில் எமது தளராத அர்ப்பணிப்பே எமது நோயாளிகளின் நலனிற்காக நவீன உத்திகளையும், மேம்பட்ட மருத்துவ செயல்முறைகளையும் தொடர்ச்சியாக அறிமுகம் செய்வதற்கும், அவற்றை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதற்கும் எங்களுக்கு வழிவகுத்திருக்கிறது.  புத்தம் புதிய இதய சிகிச்சை செயல்முறைகளை அறிமுகம் செய்வதில் முன்னோடிகள் என அறியப்படும் நாங்கள், LAMPOON   உதவியுடன் TVMR சிகிச்சை செயல்முறையை வெற்றிகரமாக செய்திருக்கும் சென்னை அல்லாத தமிழ்நாட்டின் முதல் மருத்துவமனை என மகிழ்ச்சியுடன் அறிவிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.  புத்தாக்கம் மற்றும் சிகிச்சையில் உயர்நேர்த்தியை உறுதி செய்வதில் எமது பொறுப்புறுதியை இந்த மைல்கல் நிகழ்வு கோடிட்டுக் காட்டுகிறது.  இந்த புரட்சிகரமான அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்திருக்கும் இந்த ஒட்டுமொத்த நாட்டின் வெகுசில மருத்துவமனைகளுள் ஒன்றாக இது எங்களை நிலை நிறுத்தியிருக்கிறது.”


மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் இதயவியல் துறையின் தலைவர் டாக்டர். கணேசன் இது தொடர்பாக விளக்கி கூறியதாவது: “இதயத்தின் வால்வு சுருங்குவதால், இரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தடைக்கு தீர்வுகாண 10 ஆண்டுகளுக்கு முன்பு திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை இந்த நோயாளிக்கு செய்யப்பட்டது.  எனினும், பொருத்தப்பட்ட வால்வின் தரம் காலப்போக்கில் சீர்கெட்டு மோசமாகியிருந்ததால் வால்வை மாற்றுவது தவிர்க்க முடியாததாக மாறியிருந்தது.  நோயாளியின் முதிர்ந்த வயது மற்றும் திறந்தநிலை இதய அறுவைசிகிச்சை செய்த வரலாறு ஆகியவற்றை கருத்தில் கொள்கையில், அவருக்கு நேரடியாக TVMR சிகிச்சை செய்வது சாத்தியமாகியிருக்கவில்லை.  எனவே, LAMPOON செயல்முறையை செய்வது என நாங்கள் முடிவு செய்தோம்.  ஏற்கனவே இருக்கும் வால்வில் கீறலிடுவதும், புதிய வால்வை பொருத்துவதற்காக அதன்பிறகு TVMR செயல்முறையை மேற்கொள்வதும் இச்சிகிச்சையில் இடம்பெற்றிருந்தன.   LAMPOON   செயல்முறையில், நோயாளியின் Groin பகுதி வழியாக நோயாளியின் இதயத்திற்கு செல்லும் இரத்தநாளங்கள் மூலம் இரு கதீட்டர்கள் நுழைக்கப்பட்டு, இதயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.  கதீட்டரில் சுற்றி எடுத்துச் செல்லப்பட்ட மின்னியக்க வயரானது, வால்வின் இதழை வெட்டி திறப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.  இந்த செயல்முறைக்குப் பிறகு வழக்கமான TMVR சிகிச்சை இந்நோயாளிக்கு அளிக்கப்பட்டது. இந்த செயல்முறைக்குப் பிறகு இந்நோயாளி நலமுடன் இருக்கிறார் மற்றும் இயல்பான வாழ்க்கை செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்.”


மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். R. சிவக்குமார் பேசுகையில், “டிரான்ஸ்கதீட்டர் மிட்ரல் வால்வு ரீபிளேஸ்மெண்ட் (TMVR) என்பது, இதய இடையீட்டு சிகிச்சையில் ஒரு மேம்பாடாகும்.  மிட்ரல் வால்வு சரியாக செயல்படாததன் காரணமாக, அவதியுறும் நோயாளிகளுக்கு வழக்கமான திறந்தநிலை இதய அறுவை சிகிச்சைக்கு பதிலாக மிகக்குறைந்த ஊடுருவல் கொண்ட மாற்று செயல்முறையை இது வழங்குவதே இதற்கு காரணம். திறந்தநிலை இதய அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்ற வழக்கமான அறுவை சிகிச்சை செயல்முறைகள் போல் அல்லாமல்,  Groin பகுதியில் அல்லது மார்பில் ஒரு சிறிய கீறலின் வழியாக கதீட்டர் அடிப்படையிலான உத்திகளைப் பயன்படுத்தி TMVR செய்யப்படுகிறது.  எனினும், முதிர்ந்த வயது, இணைநோய்கள் இருப்பது, அல்லது ஏற்கனவே இதய இடையீட்டு சிகிச்சைகள் செய்யப்பட்டிருப்பது ஆகிய காரணிகளினால் அத்தகைய நோயாளிகளுக்கு TMVR செயல்முறை கூட இடர் வாய்ப்புள்ளதாக இருக்கக்கூடும்.  இத்தகைய சூழலில் முன்புற தடுக்கிதழில் கீறல் செய்யப்படுகின்ற ஒரு மேம்பட்ட டிரான்ஸ் கதீட்டர் மின்னியக்க அறுவைசிகிச்சை உத்தி (LAMPOON) பயன்படுத்தப்படுகிறது.  புதிய மிட்ரல் வால்வு தேவைப்படுகின்ற ஆனால், TMVR சிகிச்சையை மட்டும் தனித்து நேரடியாக செய்ய முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்கு  சிறந்த வரமாக LAMPOON உத்தி உருவெடுத்திருக்கிறது, என்று கூறினார்.


இந்த சாதனை குறித்து விளக்குவதற்காக நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு நிகழ்வின்போது மருத்துவ நிர்வாகி  டாக்டர். B. கண்ணன், இதய மயக்க மருந்தியல் துறையின் தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர். S. குமார், இதயவியல் துறையின் முதுநிலை நிபுணர்கள் டாக்டர். S. செல்வமணி, டாக்டர். M. சம்பத்குமார் மற்றும் டாக்டர். P. ஜெயபாண்டியன், இதய அறுவை சிகிச்சை துறையின் தலைவர் மற்றும்   முதுநிலை நிபுணர்   டாக்டர். R.M. கிருஷ்ணன், இதய அறுவை சிகிச்சை துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் ராஜன், ஆகியோரும் உடனிருந்தனர்.  


இதயம் தொடர்பான பல்வேறு பாதிப்புகளை துல்லியமாக கண்டறிந்து, கனிவுடன் சிகிச்சையளித்து குணப்படுத்துவதில் அனுபவமும், நிபுணத்துவமும் கொண்ட மருத்துவர்களுடன் மீனாட்சி மிஷன் மருத்துவமனை இயங்கி வருகிறது. இதயவியல் இடையீட்டு சிகிச்சை துறையில் நவீன உத்திகளை திறன்மிக்க சிறப்பு நிபுணர்கள் பயன்படுத்தி, மேம்பட்ட இதய நல சிகிச்சையை வழங்குகின்றனர்.  இதன் மூலம் ஒவ்வொரு நோயாளிக்கும் சிறப்பான சிகிச்சை விளைவுகள் உறுதி செய்யப்படுகின்றன. 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !