ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 8000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!

Madurai Minutes
0

2024-25ஆம் கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 8000-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் வழங்க உள்ளன. இது கடந்த ஆண்டு 5000 என்ற எண்ணிக்கையில் இருந்தது. இந்த இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, ரஷ்யாவில் மருத்துவக் கல்விக்கான தேவை அதிகரித்து வருவதைப் பிரதிபலிக்கிறது. இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் அனைத்து சமீபத்திய விதிமுறைகளையும் ரஷ்யா கடைப்பிடித்து வருவதாலும், மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதாலும், மருத்துவக் கல்வியைப் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு விருப்பமான நாடுகளில், ரஷ்யா முதன்மையாக உள்ளது.


இந்த மருத்துவப் படிப்புகளுக்கான ஸ்பாட் அட்மிஷன், மே 14-ஆம் தேதி மதுரை ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெறும். எம்.பி.பி.எஸ். மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் ஸ்பாட் அட்மிஷன் கிடைக்கும்.     


இக்கல்விக் கண்காட்சியில் பங்கேற்கும் ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் பின்வருமாறு: வோல்கோகிராட் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் (Volgograd State Medical University), இம்மானுவேல் காண்ட் பால்டிக் ஃபெடரல் பல்கலைக்கழகம் (Immanuel Kant Baltic Federal University), கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் (Kazan State Medical University), தேசிய ஆராய்ச்சி நியூக்ளியர் பல்கலைக்கழகம் (National Research Nuclear University MEPhI), குர்ஸ்க் ஸ்டேட் மருத்துவப் பல்கலைக்கழகம் (Kursk State Medical University), மாஸ்கோ விமானப் போக்குவரத்து கல்வி நிறுவனம் (Moscow Aviation Institute), மாஸ்கோ ஸ்டேட் பிராந்திய பல்கலைக்கழகம் (Moscow State Regional University).


இந்தக் கண்காட்சி தமிழகத்தின் பல இடங்களில் நடைபெற உள்ளது. மே 11, 12 ஆகிய தேதிகளில், சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்திலும்; மே 15-ஆம் தேதி திருச்சி ஃபெமினா ஓட்டலிலும்; மே 16-ஆம் தேதி சேலம் ஜி.ஆர்.டி. ஸைப் ஹோட்டலிலும், மே 17-ஆம் தேதி கோவை தி கிராண்ட் ரீஜெண்டிலும் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, தொடர்பு கொள்க: 9282 221 221.


இன்று (10 மே 2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசிய ரஷ்யாவின் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள், “இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் (National Medical Commission) மாறிவரும் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே கடைப்பிடித்து வருவதால், வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியை நாடும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவே முதன்மையான தேர்வாக இருக்கிறது.


தேசிய தகுதி - நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெற்ற, 12-ஆம் வகுப்பில் முக்கிய பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்ற இந்திய மாணவர்கள் (எஸ்.சி./எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40% மட்டுமே), ரஷ்யா மருத்துவத்தில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் வழியில் படித்த மாணவர்களும் எம்.பி.பி.எஸ். / பி.இ. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி. (CET), ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) போன்ற முன் தகுதித் தேர்வுகள் தேவை இல்லை” என்று தெரிவித்தனர்.


இது குறித்து கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழக பொது நோயியல் துறையின் இணைப் பேராசிரியர் திரு. தைமூர் ருஸ்தமோவிச் அக்மதேவ் (Mr. Timur Rustemovich Akhmetov) கூறுகையில், "உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட உயர்தர மருத்துவக் கல்வியை வழங்குவதில் ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் நீண்டகாலமாக நற்பெயரை பெற்றுள்ளன. விரிவான பாடத்திட்டம், அனுபவம் வாய்ந்த பேராசிரியர்கள், மேம்பட்ட வசதிகள் ஆகியவற்றின் மூலம் தங்கள் நாட்டில் மருத்துவக் கல்வியை படிக்கும் இந்திய மாணவர்களுக்கு வலுவான கற்றல் சூழலை ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. கடந்த 60 ஆண்டுகளாக இந்திய மாணவர்கள் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள். மதிப்புமிக்க, உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட, குறைந்த கட்டணத்தில் கல்வி பெற… எனப் பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் ரஷ்யாவில் படிக்க வருகை தருகிறார்கள்" என்றார்.


ரஷ்யாவில் மருத்துவக் கல்வி பற்றி ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் (Study Abroad Educational Consultants) நிறுவனத்தின் இயக்குனர் திரு. சுரேஷ் பாபு கூறுகையில், “ரஷ்யா முழுவதும் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசுப் பல்கலைக்கழகங்களில் 200 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 3,00,000-க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் தற்போது படித்து வருகின்றனர். ரஷ்யாவில் உயர்கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்களிடையே மருத்துவம் மிகவும் பிரபலமான படிப்பாக உள்ளது. தற்போது, 30 ரஷ்யப் பல்கலைக்கழகங்களில் சுமார் 25,000 இந்திய மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். இந்தியாவில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இணையான அந்நாட்டு எம்.டி. படிப்பை அனைத்து ரஷ்யப் பல்கலைக்கழகங்களும் வழங்கி வருகின்றன. இந்திய தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ள சமீபத்திய வழிகாட்டுதல்களையும் கடைபிடித்து வருகின்றன: மருத்துவப் படிப்புத் திட்டத்தின் காலம், இன்டர்ன்ஷிப், பாடத் திட்டம், பயிற்றுவிக்கும் மொழி (ஆங்கிலம்) தொடர்பாக 2021 நவம்பரில் வெளியிடப்பட்ட அறிவிக்கை உட்பட எல்லாவற்றையும் ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் பின்பற்றுகின்றன. நோய்த்தொற்று, புவிசார் அரசியல் சூழ்நிலைகளால் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு, கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதையும் ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் உறுதிசெய்துள்ளன" என்றார்.


உலகக் கல்வி தரவரிசையில் ரஷ்ய உயர் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை சமீபத்திய ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. ரஷ்ய மருத்துவ படிப்புகள் மாணவர்களுக்கு கோட்பாட்டு அறிவு, நடைமுறை திறன்களில் வலுவான அடித்தளத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வேகமாக வளர்ந்து வரும் சுகாதாரத் துறை சார்ந்த சவால்களை எதிர்கொள்ளவும் அவர்கள் தயார்படுத்தப்படுகிறார்கள்.


கூடுதல் விவரங்கள், ஸ்பாட் அட்மிஷன்களுக்கு அகில இந்திய ரஷ்யக் கல்விக் கண்காட்சி 2024-ல் மாணவர்கள் பங்கேற்கலாம். 2024 செப்டம்பர் முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள 2024-25-ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை / முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு தாங்கள் பெற்றுள்ள தகுதி சார்ந்த சான்றுகளையும் அவர்கள் கொண்டு வரலாம்.


இந்த செய்தியாளர் சந்திப்பில், சென்னையில் உள்ள ஸ்டடி அப்ராட் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் திரு. சுரேஷ் பாபு, கசான் மாநில மருத்துவப் பல்கலைக்கழக பொது நோயியல் துறையின் இணைப் பேராசிரியர் திரு. தைமூர் ருஸ்தமோவிச் அக்மதேவ் (Mr. Timur Rustemovich Akhmetov), தேசிய ஆராய்ச்சி நியூக்ளியர் பல்கலைக்கழக பயோ டெக்னாலஜி பேராசிரியர் திருமதி. எலினா சரபுல்ட்சேவா (Ms. Elena Sarapultseva), ஆகியோர் பங்கேற்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !