மதுரையில் அசரவைத்த அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு

Madurai Minutes
0

மதுரை ஒத்தக்கடை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி  அரை நூற்றாண்டுக்கு மேலாக இயங்கி வருகிறது,


இங்கு பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வாழ்வில் உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளனர், இருபாலர் பள்ளியாக செயல்பட்டு வந்த இது காலப்போக்கில் தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. 


இந்நிலையில் இந்த பள்ளியில் 1999 - 2001  ஆண்டில் அங்கு 11 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவிகள் மற்றும் பணியாற்றிய ஆசிரியர்கள் ரீயூனியன் இன்று நடைபெற்றது, 


இதனை முன்னிட்டு பள்ளியின் நுழைவு வாயிலில் வாழைமரம் கட்டி திருமண மண்டபம் போல் பள்ளியை தயார் செய்திருந்தனர், மேலும் 90ஸ் கிட்ஸ்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகித்த பொருள்கள் அதாவது புளிப்பு மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய் , பூஸ்ட் மிட்டாய், சூட மிட்டாய், நுங்கு வண்டி, டயர் வண்டி, ஹீரோ பேனா, மை பாட்டில், சாக்பீஸ், குச்சி, சிலேடு, சட்டை , சுடிதார் ஆகியவற்றை தனியாக காட்சிப்படுத்தி வைத்திருந்தனர், 


அந்தப் பள்ளியில் பயின்ற 50க்கும் மேற்பட்ட  மாணவர்கள் மாணவிகள் அனைவரும் குடும்பம் குடும்பமாக தங்களது பிள்ளைகளளையும் , கணவர்,மனைவி என அழைத்து வந்திருந்தனர்.


வகுப்பறை போல நாற்காலிகளை வரிசைப்படுத்தி அவர்கள் அனைவரும் அமர்ந்து அவர்களுக்கு பாடம் கற்பித்த தமிழ் ஆசிரியர் பாடம் எடுத்து சில கேள்விகளையும் கேட்டார், 


23 ஆண்டுகளுக்குப் பின்பு பயின்ற பள்ளியில் தாங்கள் சேகரித்த நினைவுகளை மீண்டும் இந்த ரியூனியன் வாயிலாக கிடைத்தது என வந்திருந்த மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !