அன்னை பாத்திமா கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல்காதிர் புனிதஹஜ் யாத்திரை

Madurai Minutes
0

இஸ்லாமிய மார்க்கத்தின் படி ஒவ்வொரு இஸ்லாமியர்களும் கலிமா (இறைவன் ஒருவன்; முகம்மது நபி இறைவனின் தூதர் என்ற நம்பிக்கை), தொழுகை, நோன்பு, ஜக்காத்(தர்மம்), ஹஜ் ஆகிய 5 கடமைகளை தங்களுடைய வாழ்நாளில் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்பது இறைத்தூதர் முஹம்மது நபி அவர்கள் வகுத்து தந்த வழி முறையாகும். 


மேற்கண்ட முதல் 4 கடமைகளை இஸ்லாமியர்கள் தாங்கள் வாழுகின்ற பகுதியிலேயே நிறைவேற்றிக் கொள்ள இயலும்,  5வது கடமையான ஹஜ் கடமையை  நிறைவேற்ற உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களும் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா மாநகருக்கு பயணம் மேற்கொண்டு அங்கு  அமைந்துள்ள அரஃபா, மினா, முஜ்தலிபா மற்றும் காஃபத்துல்லா ஆகிய இடங்களில் தொழுகைகள் மேற்கொண்டு ஆடு குர்பானி கொடுப்பது இறைத் தூதர் முஹம்மது அவர்களின் வழிகாட்டுதல் ஆகும். 


இப்புனித கடமையை நிறை வேற்றும் பொருட்டு வக்பு வாரியக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், திருமங்கலம் அன்னை பாத்திமா கலை, அறிவியல் கல்லூரியின் தற்போதைய முதல்வருமான டாக்டர் அப்துல் காதிர் தனது மனைவியும், மதுரை மாநகராட்சி மருத்துவ துறையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான டாக்டர் ஜீனத் அவர்களுடன் மக்கா நகருக்கு மதுரையிலிருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் மூலம் ஜூன் மாதம் 6ஆம் தேதி மாலை சென்னை சென்று, அதன் பின் சென்னையிலிருந்து  9ம் தேதி விமானம் மூலம் ஜித்தா நகருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.


இந்த புனிதப் பயணம் மேற் கொள்ள இருக்கும் இருவரையும் மதுரை மாவட்ட ஜமாத் உலமா சபை சார்பாக கிழக்கு வட்டார தலைவர் அப்துல் கனி, ஜமாத்துல் உலமா சபையின் முன்னாள் தலைவரும், பி.பி. குளம் ஜமாஅத் பள்ளிவாசலின் இமாமுமான சாகுல் ஹமீது, மேலமடை ஜமாத் தலைவர் முகமது சிக்கந்தர், செயலாளர் அப்துல் ரகுமான், பொருளாளர் பேராசிரியர் சாகுல் ஹமீது, அண்ணாநகர், கோமதிபுரம், பிர்தௌஸ் நகர், சந்திரலேகா நகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின்  இமாம்கள் தஸ்தகீர், சுல்தான் அலாவுதீன், முஹம்மது நசீம், திவான் மைதீன்,  முகம்மது இஸ்மாயில் ,  கடையநல்லூர் ஹஜரத் ஹாஜி அஹமது மீரான், இமாம்கள்  ஷாஜகான், பரக்கத்துல்லா, டவுண்ஹால் ரோடு ஜமாத்தை சேர்ந்த மதுரை மக்கா ஹஜ் சர்வீஸ் நிறுவனர் ஹாஜி ஜின்னா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தென்காசி மாவட்டம் புளியங்குடி பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் மௌலல் கௌதமி, செயலாளர் அபுதாஹிர் உள்ளிட்ட நிர்வாகிகள், தலைமை இமாம் கலீல் ரஹ்மான் ஆகியோர் டாக்டர் அப்துல் காதிர் மற்றும் அவருடைய துணைவியார் டாக்டர் ஜீனத் ஆகியோரின் வேண்டுதல்கள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படவும், பயணங்கள் சிறப்பாக அமையவும் இறைவனை வேண்டி வாழ்த்தினர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !